மதுரை வெற்றி மகத்தானது: கருணாநிதிநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளருக்கு கிடைத்துள்ள வெற்றி மகத்தானதுஎன்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கெளஸ் பாட்ஷா அபாரவெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளஅறிக்கையில், மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளர் கெளஸ் பாட்ஷாவெற்றி பெற்றுள்ளார்.

இது, தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றி வருவதற்காக மதுரை மத்தியதொகுதி வாக்காளர்கள் வழங்கிய பரிசாகும்.

இந்த இடைத் தேர்தலில் திமுகவுக்குக் கிடைத்த வெற்றி, திமுக கூட்டணிக்கு கிடைத்தமகத்தான வெற்றியாகும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

முன்னதாக அறிவாலயத்தில் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்தநான்கு மாத ஆட்சியின் சாதனைக்கு மக்கள் அளித்துள்ள ஓட்டு இது. தேர்தல்முடிந்ததும் உதவிகளை எல்லாம் நிறுத்தி விடுவார்கள் என்று ஜெயலலிதா கூறியதைபொய்யாக்கும் வகையில் ஓட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் முடிவும், எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி இருக்கும். எனதுஅரசின் சாதனையாக ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கியதையும், ஏழைவிவசாயிகளுக்கு தரிசு நிலம் வழங்கியதையும் சிறந்த சாதனையாக கருதுகிறேன்.விஜயகாந்த் கட்சி வளர்ந்துள்ள விதம் பாராட்டப்பட வேண்டிய முன்னேற்றம்.

பஞ்சாயத்து அமைப்புகளில் மாறுதல் தேவை என்று ராமதாஸ் சொல்லியிருக்கிறார்.நானும் இதே கருத்தைத்தான் சொல்லி வருகிறேன். காமராஜர் கால ஈரடுக்கு முறைசிறந்தது. திமுக ஆட்சி நீடிக்காது என்று ஜெயலலிதா கூறியிருப்பது குறித்து மதுரைமீனாட்சி அம்மனிடம் தான் கேட்க வேண்டும். அண்ணாவால் பாராட்டப்பட்டவர்பேராசிரியர் அன்பழகன். அவரையும், ஆற்காடு வீராசாமியையும் சிக்குன்குனியாகொசு என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

நாவலர் நெடுஞ்செழியனையே உதிர்ந்த ரோம் என்று கூறியவர்தான் ஜெயலலிதாஎன்றார் கருணாநிதி. இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து அனைத்தக் கட்சிக்குழுவை டெல்லிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று உங்களுக்கு ராமதாஸ்வேண்டுகோள் விடுத்துள்ளரே என்ற கேள்விக்கு, நான் அழைத்தால் எல்லோரும்வருவார்களா? அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அழைத்துச் செல்வேன் என்றார்கருணாநிதி.

மக்கள் நம்பிக்கையின் வெளிப்பாடு: திருமா.

இதற்கிடையில் மதுரை இடைத் தேர்தல் முடிவு வெளியானதைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் திருமாவளவன் அண்ணாஅறிவாலத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். அவருக்கு மதுரை இடைத் தேர்தல் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசுகையில், மதுரை இடைத் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. சிறு அசம்பாவிதம்கூட இல்லாமல், எந்தவிதமான புகாருக்கும் இடம் தராமல் நடந்த தேர்தல் இது.

இந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருப்பது திமுக கூட்டணி அரசின் மீதும், கூட்டணியின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகஉள்ளது என்றார்.

பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எத்தனை உள்ளாட்சிப் பதவிகளை ஒதுக்குவது என்பது குறித்து முதல்வருடனும், திமுக குழுவுடனும் திருமாவளவன்தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குழு பேச்சு நடத்தியது.

காங்கிரஸ்:காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் செயல்பாட்டுக்கு மக்கள் தந்த அங்கீகாரம்தான்திமுகவுக்கு கிடைத்துள்ள வெற்றி.

ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு தொடர்ந்து மகத்தான வெற்றியைத் தரும் தமிழக மக்களுக்கும், அதற்காக உழைத்த காங்கிரஸ் மற்றும்கூட்டணிக் கட்சிகளின் தோழர்களுக்கும் எனது நன்றிகள் என்று கூறியுள்ளார்.

திராவிட கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், எப்படியும் வெற்றி பெற்று விட வேண்டும் என்று அதிமுக கூட்டணியினர்பல்வேறு முயற்சிகளிலும், பழி தூற்றலிலும் இறங்கினர். அதிகாரிகள் மாற்றம் முதல் பலவித முயற்சிகளை அவர்கள் செய்தனர்.

இடைத் தேர்தல் முடிவு ஆட்சியின் கொள்கை உரைகல்லில் வைத்து உரைத்துப் பார்த்து மீண்டும் மக்கள் மதுரை மத்திய தொகுதியில் திமுக கூட்டணியைவெற்றி பெறச் செய்தது.

இனியாவது எதிர்க்கட்சியினர் இந்த அரசை மைனாரிட்டி அரசு என்று கூறி தங்களைத் தாழ்த்திக் கொள்ளாமல் இருப்பார்களாக என்று கூறியுள்ளார்.

மு.க.அழகிரி: மதுரை மருத்துவக் கல்லூரியில் ஓட்டு எண்ணிக்கை முடிந்த நிலையில் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி அங்கு வந்தார். அவர்செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த மகத்தான வெற்றி தலைவர் டாக்டர் கலைஞர் அரசின் 100 நாள் சாதனைக்குக் கிடைத்த வெற்றியாகும்.

இதன் மூலம் திமுக அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை நிரூபணம் ஆகியுள்ளது. வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றிகள் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+