நீதி விசாரணையை எதிர்த்து லட்சுமி வழக்கு
கொச்சி:முன்னாள் அமைச்சர் ஜோசப் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டது தொடர்பாகவிசாரிக்க கேரள அரசு நீதி விசாரணை நடத்துவதற்கு தடை கோரி கேரளஉயர்நீதிமன்றத்தில் மலையாள நடிகை லட்சுமி கோபகுமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த லட்சுமி கோபகுமார் கொச்சிக்கு விமானத்தில் சென்றபோதுஅவரது பின் இருக்கையில் அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் ஜோசப் செக்ஸ்சில்மிஷத்தில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து கேரள பெண் ஐஜி சந்தியாவிசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தார். இதையடுத்து ஜோசப் பதவிவிலகினார்.
இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என கேரள அரசுஅறிவித்தது. ஆனால் நீதி விசாரணை நடத்தும் கேரள அரசின் முடிவால் லட்சுமிஅதிருப்தி அடைந்தார். இதையடுத்து சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில்ஜோசப் மீது புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரை ஏற்ற போலீஸார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் முதல் தகவல்அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் கொச்சியில் உள்ள கேரளஉயர்நீதிமன்றத்தில் லட்சுமி ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ஏற்கனவேஐஜி ஒருவரைக் கொண்டு கேரள அரசு விசாரணை நடத்தியுள்ளது.
இந்த நிலையில் நீதி விசாரணை தேவையில்லை. இந்த விவகாரம் கேரளமாநிலத்திற்குள் நடக்கவில்லை. எனவே கேரள அரசு நீதி விசாரணை நடத்த முடியாது.எனவே கேரள அரசின் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தமனு தலைமை நீதிபதி வி.கே.பாலி, நீதிபதி ராமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்புநாளை விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications