ஓடும் லாரியில் ஓட்டுப் பெட்டிகள் மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகே லாரியில் கொண்டு செல்லப்பட்ட ஓட்டுப் பெட்டிகளை மாற்ற முயன்ற தேர்தல் அதிகாரிகளை,அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் வளைத்துப் பிடித்தனர்.

சென்னை அருகே உள்ள நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் பகுதியில் கடந்த 15ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.இதில் பதிவான வாக்குச் சீட்டுக்கள் அடங்கிய வாக்குப் பெட்டிகளை சீல் வைத்து லாரிகள் மூலம் துரைப்பாக்கம்ஜெயின் பொறியியல் கல்லூரிக்கு எடுத்துச் சென்றனர்.

வாக்குப் பெட்டிகளுடன் சென்ற லாரிகளைப் பின் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தொண்டர்களும்பின்னாலேயே வாகனங்களில் வந்தனர். அப்போது லாரியில் இருந்த தேர்தல் அதிகாரி ஜோன்ஸ் என்பவர், சாக்குமூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிகளை எடுத்தார்.

இதைப் பார்த்த அரசியல் கட்சியினர் ஆவேசமடைந்து சப்தம் போட்டு லாரியை நிறுத்தினர். அதிகாரிகள்ஜோன்ஸ், தேவராஜ் ஆகியோரை சிறை பிடித்தனர். மோகன் என்பவர் தப்பி விட்டார். அதிகாரிகள், பதிவானவாக்குகள் அடங்கிய வாக்குப் பெட்டியை மாற்ற முயன்றதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் தொண்டர்கள்குதித்தனர்.

இதேபோல ஜெயின் கல்லூரிக்கு வந்த மற்ற லாரிகளையும் மடக்கிப் பிடித்து சிறை வைத்தனர். இதனால் அங்குபரபரப்பு ஏற்பட்டது. துணை ஆணையர் மகேந்திர குமார் ரத்தோட் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் விரைந்துவந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தேர்தல் அதிகாரிகள் இருவரும், சாக்குமூட்டையில் வேறு ஆவணங்களை சேர்க்கத்தான் முயன்றோம்.வாக்குப் பெட்டிகளை மாற்ற முயலவில்லை என்று கூறினர். சுமார் 2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்குப்பின்னர் தொண்டர்கள் சமாதானமடைந்தனர். அதன் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+