தனித் தன்மையை காட்டி விட்டோம்: விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை:மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் பெரிய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோதிலும் நாங்கள் தனித்து நின்று எங்களது தனித் தன்மையை நிலை நாட்டி விட்டோம் என தேமுதிக தலைவர்விஜயகாந்த் கூறியுள்ளார்.

மதுரை மத்திய தொகுதி தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட பாதிக்கும் மேல் கூடுதலாகப் பெற்று வளர்ந்து வருகிற கட்சிஎன்பதை நிரூபித்து விட்டோம். இந்த தேர்தலில் இதர பெரிய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துப்போட்டியிட்டன.

ஆனால் நாங்கள் தனித்துப் போட்டியிட்டு, எங்களது தனித் தன்மையை நிலை நாட்டி விட்டோம்.ஆளுங்கட்சியான திமுக, சாதி, மதக் கட்சிகள் உள்பட நாட்டில் உள்ள கிட்டத்தட்ட அனைத்தக் கட்சிகளையும்கூட்டணி சேர்த்து, பணம், பலாத்காரம், பதவி ஆகியவற்றின் துணையோடு கள்ள ஓட்டுக்கள் உள்படவெகுவாகப் பாட்டது.

அதுதான் திமுகவுக்குக் கிடைத்துள்ள தற்காலிக வெற்றியாகும். ஆனால் தேமுதிக, தமிழ்நாட்டில் தூய்மாைனஅரசியலைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக வாக்காளர்களை அச்சுறுத்தவோ, லஞ்சம் கொடுத்தோ,தவறான ஆசைகளை காட்டியோ, ஒவ்வாத அணுகுமுறைகளைப் பயன்படுத்தியோ இந்தத் தேர்தலில் வாக்குகேட்கவில்லை.

தேமுதிகவுக்கு கிடைத்த வாக்குகள் அனைத்தும் ஆசாபாசங்களுக்கு உட்படாத நல்ல வாக்குகள். எங்கள் மீதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது. தவறான முறையில் வெற்றி என்பதை விட கண்ணியானமுறையில் பெரும் தோல்வி சிறந்தது என்பார்கள். அடாவடி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அறவழிஅரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்ற உத்தரவாதத்தை மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் மீது பற்றுக் கொண்டு அராஜகத்திற்கும், அடக்குறைகளுக்கும், அதிகாரத்திற்கும் ஆட்படாமல் துணிந்த நின்றுதேமுதிகவுக்கு வாக்களித்த தூய உள்ளங்களுக்கு எனது உதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+