நடுரோட்டில் முன்னாள் எம்எல்ஏ மனைவி குடுமிபிடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நுங்கம்பாக்கத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வின் மனைவியும், தனியார் நிறுவன அதிகாரியின் மனைவியும்கட்டி உருண்டு சண்டை போட்டதால் அந்தப் பகுதியே பெரும் பரபரப்பில் மூழ்கியது.

மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் செல்வி. இவர் முன்னால் எம்.எல்.ஏ. ஒருவரின் மனைவி. இவரது 2 மகள்களும்நுங்கம்பாக்கத்தில் உள்ள நடன வகுப்புக்கு சென்று கொண்டுள்ளனர். தினசரி தனது மகள்களை காரில் அழைத்துக்கொண்டு செல்வி செல்வது வழக்கம்.

சனிக்கிழமையும் அதுபோல தனது மகள்களை நடன வகுப்பில் விட்டுள்ளார். பின்னர் தனது காரை அருகில்உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் கார் பார்க்கிங்கில் கொண்டு போய் தனது காரை நிறுத்தியுள்ளார். அதேஅடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் ஹரிணி.

இவரது கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருக்கிறார். ஹரிணியின் காரை எடுக்க முடியாதஅளவுக்கு அடைத்துக் கொண்டு செல்வி தனது காரை நிறுத்தியிருந்தார். இந்த நிலையில் ஹரிணி உடல் நலம்பாதிக்கப்பட்ட தனது கைக்குழந்தையுடன் கீழே இறங்கி வந்தார். காரை எடுக்க முயன்ற போது செல்வியின் கார்மறைத்துக் கொண்டு நின்றதால் அவரால் எடுக்க முடியவில்லை.

இதையடுத்து காரை எடுக்குமாறு செல்வியிடம் அவர் கூறினார். அதற்கு செல்வி அலட்சியமாக பேசியிருப்பார்போலத் தெரிகிறது. இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபமடைந்தஹரிணி கற்களை எடுத்து செல்வியின் கார் கண்ணாடியை உடைத்தார். அவ்வளவு தான் பத்ரகாளி ஆகி விட்டார்செல்வி.

ஹரிணியின் தலைடியைப் பிடித்து இழுத்து உலுக்கினார். பதிலுக்கு ஹரிணியும் செல்வியின் முடியைப் பிடித்துஆய்ந்தார். இருவரும் சண்டை போட்டபடி தெருவுக்கே வந்து விட்டனர். கட்டிப் புரண்டு உருண்டு இருவரும்ஆக்ரோஷமாக சண்டை போட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் இருவரையும் மிகச்சிரமப்பட்டு விலக்கி விட்டனர்.

சண்டையை முடித்துக் கொண்ட செல்வி அங்கிருந்து நேராக நுங்கம்பாக்கம் காவல் நிலையம் சென்றுஇன்ஸ்பெக்டர் முருகேசனை சந்தித்து ஹரிணி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யும்படி ஆவேசமாககூறினார். பதிலுக்கு ஹரிணியும் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி செல்வி மீது வழக்குப் பதிவு செய்யுமாறுநிர்ப்பந்தப்படுத்தினார்.

இதனால் குழம்பிப் போன போலீஸார் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் இருவரின் ஆத்திரம்தீரவில்லை. இதுவரை இருவர் மீதும் வழக்குப் பதியாமல் உள்ளனர் போலீஸார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+