கமல் ரசிகர்கள் போஸ்டருக்கு முஸ்லீம்கள் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி சென்னை நகரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களுக்கு இஸ்லாமியசமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கமல்ஹாசன் நவம்பர் 7ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி பல்வேறு நலப்பணிகளை அவரது ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை நகரில் பல்வேறு இடங்களில்போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

அதில் நவம்பர் 7ம் தேதி பிறந்த நாள் காணும் நடிப்புலகின் நபிகள் நாயகமே வாழ்த்துகிறோம்! பாலையும்மிஞ்சும் வெள்ளை நிறமே, பாரி வள்ளலும் கெஞ்சும் வள்ளல் குணமே என்பது உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ன.

இந்த போஸ்டருக்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தபோஸ்டரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அக்கட்சியின்சார்பில் ஹைதர் அலி புகார் கொடுத்தார்.

இதையடுத்து அண்ணா சாலையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டன. இஸ்லாமிய சமூகத்தினர்மனம் நோகும்படியான போஸ்டர்கள் ஒட்டப்பட்டது குறித்து கமல்ஹாசன் தலைமை ரசிகர் நற்பணி மன்றம்வருத்தம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற போஸ்டர்களை ஒட்டக் கூடாது என்றும் மன்றத்தினருக்கு கண்டிப்பானஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+