மதுரை வன்முறை வழக்கு சென்னைக்கு மாற்றம்
மதுரை:மதுரை மாநகராட்சி தேர்தல் வன்முறை தொடர்பாக மதுரை மத்திய தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டுதோல்வியுற்ற ராஜன் செல்லப்பா தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி மதுரை கிளைநீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ராஜன் செல்லப்பா தாக்கல் செய்த பொது நல மனுவில், மதுரைமாநகராட்சியின் 65வது வார்டு அதிமுக வேட்பாளர் ராஜா சீனிவாசன் திமுகவினரால் கடத்தப்பட்டார். 55 மற்றும்58வது வார்டுகளில் போலீஸ் உதவி ஆணையர் சுந்தரேசன் உதவியுடன் அதிமுக பூத் ஏஜென்டுகள்வெளியேற்றப்பட்டனர். இங்கு அதிக அளவில் கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டன.
எனவே இந்த பூத்களிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை மதுரைமாநகராட்சி ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் மிஸ்ரா, ராஜ சூர்யா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அதன் பின்னர்நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய பின்னர் தடை விதிக்கக் கூடாது எனஉச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. எனவே ஓட்டு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க முடியாது.
2 வார்டுகளில் மறு தேர்தல் கோரப்பட்டுள்ளது. இதேபோல சென்னை மாநகராட்சியிலும் மறு தேர்தல்கோரப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அது நலுவையில் உள்ளது.
எனவே இந்த வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோபாத்யாயா, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர்அடங்கிய பெஞ்ச் விசாரைணக்கு மாற்றுகிறோம் என்று தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications