திமுகவுக்கு தாவிய அதிமுக வேட்பாளர் திடீர் மரணம்
சென்னை:சென்னை மாநகராட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு பின்னர் திமுகவுக்குத் தாவிய பெண்வேட்பாளர் மேரி டேணியல் மர்மமான முறையில் மரணமடைந்தார். இதனால் அவரது இல்லம் உள்ள பகுதியில்பரபரப்பு நிலவுகிறது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் மேரி டேணியல். 50 வயதான இவர் ஆரம்பம் முதலே தீவிரஅதிமுக தொண்டர். 109வது வார்டு மகளிர் அணித் தலைவியாகவும் இருந்து வந்தார்.
அதிமுக சார்பில் 109வது வார்டுக்கு போட்டியிட்டார். வாக்குப் பதிவு நாளன்று மாலை திடீரென இவர்திமுகவுக்குத் தாவினார். இவரைப் போல மேலும் ஒரு அதிமுக பெண் வேட்பாளரும் திமுகவில் இணைந்தார்.
இந்த நிலையில், திமுகவில் சேர்ந்த நாள் முதல் யாருனுடம் பேசாமல், அமைதியாக இருந்து வந்தார் மேரி. நேற்றுஅவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.
இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் மேரி இறந்தார். அவரது உடல் சுதந்திரா நகரில் உள்ள அவரது வீட்டுக்குஎடுத்துச் செல்லப்பட்டது. அங்கு திமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் வந்து மேரி உடலுக்கு அஞ்சலிசெலுத்தினர்.
அதிமுகவிலிருந்து தாவிய சில நாட்களிலேயே திடீரென மேரி இறந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.மேலும் இரு கட்சித் தொண்டர்களும் அங்கு கூடியுள்ளதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications