காங்கிரஸுக்கு கோவை, திருச்சி மேயர் பதவி?
சென்னை:
காங்கிரஸ் கட்சிக்கு கோவை மற்றும் திருச்சி மேயர் பதவிகள் வழங்கப்படும் என தெரிகிறது.
உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடந்த 5மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி அப்படியே அள்ளியுள்ளது.
தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணிகளுக்கிடையே நடந்த உடன்பாட்டின்படி திமுகவுக்கு 4 மாநகராட்சிகள்எனவும், காங்கிரஸுக்கு 2 எனவும் பிரித்துக் கொள்ளப்பட்டன.
தற்போது தேர்தல் முடிந்து டிவுகளும் வெளியாகி விட்டதால் யாருக்கு எந்தெந்த மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி என்பது குறித்து பேச்சுக்கள் தொடங்கி விட்டன.
இதுதொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையிலான குழு பேச்சு நடத்திவருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் இதுவரை இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
காங்கிரஸ் கட்சி மதுரை, திருச்சி, கோவை, நெல்லை ஆகியவற்றில் ஏதாவது இரண்டை ஒதுக்குமாறுகோரியுள்ளதாகத் தெரிகிறது. இதில் கோவை, திருச்சி ஆகியவை காங்கிரஸுக்குக் கிடைக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி மாநகராட்சியை காங்கிரஸ் கட்சிதான் கடந்த முறை வைத்திருந்தது. கோவையை அதிமுகவிடமிருந்துதிமுக கூட்டணி பறித்துள்ளது. கோவை பொதுவாக காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்படுவது வழக்கம். எனவேஇம்முறை காங்கிரஸ் கட்சிக்கே கோவை கிடைக்கும் எனத் தெரிகிறது.
மதுரை, நெல்லை, சேலம் ஆகிய மாநகராட்சிகளை திமக தன் வசம் வைத்துக் கொள்ளும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications