நெல்லை-தேமுதிகவுக்கு 2ம் இடம்-மதிமுக 0
திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சித் தேர்தலில் திமுக தனித்தே பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.இந்த மாநகராட்சியை அதிமுகவிடம் இருந்து திமுக கைப்பற்றியுள்ளது.
திமுக 29 இடங்களில் வென்றுள்ளதால் இங்கு தனித்தே அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.
9 இடங்களில் போட்டியிட்ட மதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் மண்ணைக் கவ்வியுள்ளது.மதிமுகவுக்கு பலம் மிகுந்த பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் நெல்லையிலேயே அந்தக் கட்சி படுதோல்விஅடைந்திருப்பது வைகோவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நெல்லையில் பெரும்பாலான இடங்களில் விஜயகாந்தின் தேமுதிக இரண்டாவது இடத்தைப் பிடித்துக்காட்டியுள்ளது. இதன்மூலம் அதிமுக, மதிமுகவின் ஓட்டு வங்கியை விஜய்காந்த் கரைத்துவிட்டது தெளிவாகிறது.
வெற்றி விவரம்:
மொத்த வார்டுகள்: 55
முடிவு தெரிந்தவை: 55
திமுக - 29
காங்கிரஸ் - 3
சிபிஎம் - 2
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 3
அதிமுக - 13
பாஜக - 1
சுயேச்சைகள் - 7
இதன் மூலம் இந்த மாநகராட்சியை திமுகவிடம் இழந்துள்ளது அதிமுக. இந்த மாநகராட்சியில் மேயர், துணை மேயர் ஆகியஇரண்டு பதவிகளையும் திமுகவே கைப்பற்ற உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications