மறுவாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை: அதிமுக-மதிமுக புறக்கணிப்பு
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு இன்று நடைபெறும் மறு வாக்குப் பதிவையும், வாக்கு எண்ணிக்கையையும்புறக்கணிப்பதாக அதிமுகவும், மதிமுகவும் அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் வாக்குப்பதிவின்போது திமகவினர் நிநத்திய அராஜகம், அக்கிரம், வன்முறையை நாடறியும்.
தேர்தல் அதிகாரிகளை ஆளுங்கட்சியினர் மிரட்டினர். யாரையும் வாக்களிக்க விடவில்லை. போலி வாக்குகளைதிமுகவினர் வாக்குப் பெட்டிக்குள் திணித்தனர். சில வாக்குச் சாவடிகளில் 110 சதவீதம் வரையில் வாக்குப் பதிவுநடந்துள்ளது.
தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது எல்லாவித முறைகேடுகளினால் தமிழகம்முழுவதும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறவில்லை என்பதுதெளிவாகிறது. அதிமுகவினரும், கூட்டணி கட்சியினரும் கடுமையாகதாக்கப்பட்டதால் வேதனைகளையும், இன்னல்களையும் அனுபவித்து வருகின்றனர்.
ஜனநாயகத்திற்கு எதிராக நடத்தப்படும் இந்த தேர்தலை நான் வன்மையாககண்டிக்கிறேன். இப்படிப்பட்ட அராஜகத்தை நடத்தி தேர்தலில் வெற்றி பெறுவதற்குபதிலாக, மைனாரிட்டி திமுக அரசு இந்த உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல்,கருணாநிதி தனது குடும்பத்தாருடன் கலந்து பேசி, யாரை எங்கு நியமிக்கலாம்என்பதை முடிவு செய்து அறிவித்து இருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால்ஆயிரக்கணக்கான அப்பாவிகள் இப்படி ரத்தம் சிந்தியதை தவிர்த்து இருக்கலாம்.
இந்தத் தேர்தலை ரத்து செய்து மறு தேர்தல் நடத்தக் கோரி உயர்நீதிமன்றத்தையும், உச்சநீதிமன்றத்தையும்அணுகியும் பலன் இல்லை. நீதி கிடைக்கவில்லை. வெறும் 27 வாக்குச் சாவடிகளில் மட்டும் மறு வாக்குப் பதிவுநடப்பதால் ஒரு பலனும் இலலை, இதனால் இறந்து போன ஜனநாயகம் உயிர் பெறப் போவதில்லை.
எனவே இன்று நடைபெறும் மறு வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளாமல் அதிமுகபுறக்கணிக்கும் என்று கூறியுள்ளார்.
வைகோ:
இதேபோல மறு வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கையைப் புறக்கணிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர்வைகோவும் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணிக் கட்சிகளின்துணையால் மைனாரிட்டி அரசு அமைத்த திமுக உள்ளாட்சித் தேர்தலில் எப்படியும்வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று முடிவெடுத்து அனைத்து வகையிலும்ஜனநாயகத்துக்கு விரோதமான வழிமுறைகளையே கையாண்டது.
மாநில தேர்தல் ஆணையர் ஆளுங்கட்சியின் எடுபிடி ஏஜென்டாகவே செயல்பட்டார்.27 ஓட்டுச் சாவடிகளில் மறுதேர்தல் என்பது ஜனநாயகத்துக்கு இழைக்கப்பட்டுவிட்டகொடுமைக்கு பரிகாரம் ஆகாது.
எனவே, 27 ஓட்டுச் சாவடிகளில் அறிவிக்கப்பட்டுள்ள மறு ஓட்டுப் பதிவிலும் இன்றுநடைபெறும் சென்னை மாநகராட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கையிலும் மதிமுகபங்கேற்காமல் புறக்கணிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றுகூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications