திமுக கூட்டணியின் பிடியில் 26 மாவட்டங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழகத்தில் 26 மாவட்டங்களின் உள்ளாட்சி அமைப்புகளை திமுக கூட்டணிகைப்பற்றியுள்ளது.

தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 5 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணிகைப்பற்றியுள்ளது. இதுதவிர மொத்தமுள்ள 152 நகராட்சிகளில் (3ம் நிலைநகராட்சிகளையும் சேர்த்து) 116 நகராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

அதிமுக கூட்டணிக்கு 13 நகராட்சிகள் மட்டுமே கிடைத்துள்ளன. மேலும் 23நகராட்சிகளில் சுயேச்சைகளே அதிகம் வென்றுள்ளனர். இருப்பினும் இவற்றிலும்சுயேச்சைகளை வளைத்து திமுக கூட்டணியே நர்வாகத்தைக் கைப்பற்றும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் 26 மாவட்டங்களில் திமுக கூட்டணியின் கையில் உள்ளாட்சிநிர்வாகங்கள் வந்துள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாம்பரத்தைத் தவிர மற்ற 5 நகராட்சிகளையும் திமுககூட்டணி வென்றுள்ளது. தாம்பரத்தில் சுயேச்சைகளின் ஆதரவுடன் திமுகநிர்வாகத்தைப் பிடிக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளையும் திமுக கூட்டணி வென்றுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளும் திமுக கூட்டணிக்கேசென்றுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 9 நகராட்சிகளில் 8ஐ திமுக கூட்டணி பிடித்துள்ளது.குடியாத்தம் மட்டும் அதிமுகவுக்கு சென்றுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் திருப்பூர், உடுமலையை திமுககூட்டணி பிடித்துள்ளது. பொள்ளாச்சி, மேட்டுப்பாளையத்தில் சுயேச்சைகள்ஆதரவுடன் திமுகவே பிடிக்கிறது. அதிமுகவுக்கு இங்கு முட்டைதான் கிடைத்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஐந்து நகராட்சிகளையும் திமுக கூட்டணியேபிடித்துள்ளது. இங்கும் அதிமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகளில் குன்னூரை திமுக பிடித்துள்ளது.ஊட்டியில் சுயேச்சைகள் ஆதரவுடன் திமுக நகராட்சியைப் பிடிக்கிறது.

சேலத்தில் உள்ள 3 நகராட்சிகளையும் திமுக கூட்டணியே பிடித்துள்ளது. தர்மபுரிமாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு நகராட்சியையும் திமுகவே பிடித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் நகராட்சியை திமுக பிடித்துள்ளது.கிருஷ்ணகிரியில் மட்டும் இழுபறி உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், திருச்செங்கோட்டை திமுக பிடித்துள்ளது.நாமக்கல்லில் அதிமுக அதிக இடங்களில் வென்றுள்ளது. இருப்பினும் சுயேச்சைகள்ஆதரவு கிடைக்கும் கட்சிக்கே நகராட்சி போகும் நிலை உள்ளது.குமாரபாளையத்திலும் இழுபறி நிலவுகிறது.

கடலூர் மாவட்டத்தில் ஐந்து நகராட்சிகளில் நான்கில் திமுக கூட்டணி வென்றுள்ளது.பண்ருட்டியை அதிமுக பிடித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இரு நகராட்சிகளையும் திமுக கூட்டணியேவென்றுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர், மணப்பாறை ஆகிய இருநகராட்சிகளையும் திமுகவே வென்றுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் நகராட்சியை திமுக பிடித்துள்ளது. குளித்தலையில்இழுபறி ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இரு நகராட்சிகளையும் திமுக அணியேவென்றுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகளையும் திமுக கூட்டணியேபிடித்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு நகராட்சிகளும் திமுக வசமே வந்துள்ளன.நாகை மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகளையும் திமுக அணியே பிடித்துள்ளது.மொத்தத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நகராட்சிகள் அனைத்துமேதிமுக அணியிடமே வந்துள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நான்கு நகராட்சிகளையும் திமுக அணியேபிடித்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளில் 3ஐ திமுக அணிவென்றுள்ளது. பெரியகுளத்தை அதிமுக பிடித்துள்ளது. தேனி நகராட்சியில் இழுபறிநிலவுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரத்தை திமுகவும், பரமக்குடியைஅதிமுகவும் கைப்பற்றியுள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, தேவகோட்டையை திமுகவேபிடித்துள்ளது. சிவகங்கையில் இழுபறி காணப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில்உள்ள 6 நகராட்சிகளிலும் திமுக அணியே வென்றுள்ளது.

மதுரை மாட்டத்தில் உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், மேலூர் ஆகிய நகராட்சிகளைதிமுக அணியே வென்றுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள ஐந்து நகராட்சிகளில் தென்காசி, செங்கோட்டையைதிமுக பிடித்துள்ளது. சங்கரன்கோவிலில் இழுபறி காணப்படுகிறது. கடையநல்லூர்,புளியங்குடியில் சுயேச்சைகள் அதிகம் வென்றுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இரு நகராட்சிகளையும் திமுக அணியேகைப்பற்றியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், குழித்துறை ஆகியஇரண்டையும் திமுக பிடித்துள்ளது. குளச்சலில் சுயேச்சைகள் ஆதிக்கம் நிலவுகிறது.பத்மநாபபுரத்திலும் இதே நிலைதான்.

பெரம்பலூரில் நகராட்சிகள் எதுவும் இல்லை. இருப்பினும் இந்த மாவட்டத்தில் உள்ளபேரூராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சி, மாவட்ட பஞ்சாயத்து உள்ளிட்டஅனைத்திலுமே திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.

மாநகராட்சியில் வெள்ளை அடிக்கப்பட்ட அதிமுக கூட்டணிக்கு நகராட்சி,பேரூராட்சி, மாவட்ட பஞ்சாயத்துக்களிலும் பெரும் தோல்வியே கிடைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+