பட்டாசு விபத்தில் 2 சிறுமிகள் பலி

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி:புதுவை மாநிலம் வில்லியனூரில் தீபாவளியன்று (நேற்று) நடந்த பட்டாசு விபத்தில் இரு சிறுமிகள் பலியானர்.

புதுவை அருகே வில்லியனூரில் தீபாவளியன்று காஞ்சனா (14) என்பவரின் வீட்டில் அனைவரும் பட்டாசுகளைவெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மழை பெய்ய ஆரம்பித்தது.

இதையடுத்து வெளியில் வைத்திருந்த பட்டாசுகளை அப்படியே அள்ளி பொட்டலமாக கட்டி காஞ்சனாவின்தாயார் வைத்திருந்த காய்கறிக் கடையில் வைத்தனர்.

அப்போது காஞ்சனாவின் உறவினரான ராஜகுமாரி என்ற சிறுமி தனது பொம்மைத் துப்பாக்கியில், கேப்வெடியை வைத்து வெடித்துள்ளார். அதிலிருந்து கிளம்பிய தீப் பொறி, காய்கறிக் கடையில் வைத்திருந்தபட்டாசுகள் மீது பட்டது.

இதையடுத்து பட்டாசுகள் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறின. இந்த விபத்தில் சிக்கி காஞ்சனா சம்பவஇடத்திலேயே இறந்தார். 5 பேர் படுகாயமடைந்தனர்.

அனைவரும் புதுவை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றிராஜகுமாரியும் பலியானார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+