தொண்டர்களோடு வெடி போட்டு வாசன் குஷி
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் இணைந்து வெடிபோட்டு தீபாவளியைக் கொண்டாடினார் மத்திய இணையமைச்சர் வாசன்.
மாநகராட்சித் தேர்தலில் வென்ற கவுன்சிலர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்னைஆழ்வார்பேட்டையில் உள்ள வாசனின் வீட்டில் குவிந்து அவருக்கு தீபாவளிவாழ்த்துத் தெரிவித்தனர்.
இதையடுத்து வந்திருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கிய வாசன், வீட்டுக்குள்இருந்து 10,000வாலா சர வெடியைக் கொண்டு வந்து வைத்தார்.உள்ளாட்சித் தேர்தல் வெற்றி-தீபாவளியை கொண்டாடும் வகையில்தொண்டர்களோடு சேர்ந்து சர வெடியை கொளுத்தினார்.
வெடி சத்தத்துக்கு இணையாக தொண்டர்களும் கத்தி முடிக்க வெடியும் வெடித்துமுடித்தது.












Click it and Unblock the Notifications