குடிகாரன் பேச்சு-விஜயகாந்த் மீது ஜெ தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:குடிகாரனைப் போல பேசிக் கொண்டு, கருப்பு எம்.ஜி.ஆர், சிவப்பு எம்.ஜி.ஆர். என்றுகூறிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகி விட முடியாது. ஒரே ஒருஎம்.ஜி.ஆர்.தான். அவரது வாரிசுகள் நாம்தான் என்று தேமதிக தலைவர் நடிகர்விஜயகாந்த்தை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா படு காட்டமாகவிமர்சித்துள்ளார்.

விஜயகாந்த் தேமுதிகவை ஆரம்பித்ததிலிருந்து ஜெயலலிதாவைத் தவிர மற்றஅத்தனை அரசியல் தலைவர்களும் லேசு பாசாகவும், காட்டமாகவும், கடுமையாகவும்விமர்சித்துப் பேசியுள்ளனர்.

ஆனால் ஜெயலலிதா மட்டும் விஜயகாந்த் குறித்து எந்தவித கடுமையானவிமர்சனத்தையும் கூறாமல் இருந்து வந்தார். அதே போல விஜய்காந்தும்ஜெயலலிதாவை தாக்காமல் திமுகவை மட்டுமே குறி வைத்துத் தாக்கினார்.

இருவரும் அண்டர்கிரவுண்ட் அண்டர்ஸ்டாண்டிங்கோடு அரசியல் செய்து வந்தனர்.ஆனால், அது அதிமுகவுக்கே கவுண்டர் புரொடக்டிவ் ஆகிவிட்டது மதுரை இடைத்தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தலிலும் வெட்ட வெளிச்சமானது.

திமுகவை விஜய்காந்த் தாக்கியதை ஆதரித்தவர்கள் அதிமுகவை விட்டுவிட்டு தேமுதிகவுக்கு ஓட்டுபோட்டுவிட்டனர். இதனால் அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரிய ஓட்டை விழுந்து எதிர்பாராத தோல்விகிடைத்துள்ளது.

இதனால் திமுகவை விட உடனடியாக விஜய்காந்தை சமாளித்தாக வேண்டிய நிலைக்கு ஜெயலலிதாதள்ளப்பட்டுள்ளார்.

இந் நிலையில் விஜயகாந்த்தை குடிகாரன் என்று மறைமுகமாக கூறி கடுமையாகதாக்கி அறிக்கை விட்டுள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கைவிவரம்:

தேமுதிக சாதித்து விட்டது என்கிறார்கள். அந்தக் கட்சி வெறும் 3 சதவீதஇடங்களில்தான் வெற்றி பெற்றிருக்கிறது. இதே 3 சதவீத இடங்களை நமதுதோழமைக் கட்சியான மதிமுக கூட பெற்றிருக்கிறது.

ஊழலை ஒழிப்பேன், வீட்டுக்கு வீடு ரேஷன் பொருட்களை வழங்குவேன் என்றுகூறுவதெல்லாம் குடிகாரன் பேச்சைப் போன்றதுதான். நான் யாரைச் சொல்கிறேன்என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும்.

கருப்பு எம்.ஜி.ஆர்., சிவப்பு எம்.ஜி.ஆர். என்று தங்களைத் தாங்களே சிலர் கூறிக்கொள்கிறார்கள். காலாகாலத்திற்கும் ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.தான். அவருடையவாரிசுகள் நாம். எந்த நேரத்திலும் வேறு ஒருவர் எம்.ஜி.ஆர். ஆகி விட முடியாது.

மதுரையில் நடந்த இடைத் தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் அமைதியானமுறையில் நடத்தியது என்றுதான் நான் கூறினேன். நேர்மையாக என்று நான் கூறவேஇலலை. தேர்தல் தினத்துக்கு முந்தைய தினம் தேர்தல் ஆணையம் சிலநடவடிக்கைகளை எடுத்தது. அதனால் வாக்குப் பதிவு நாளன்று பெரிய அளவில்வன்முறை இன்றி தேர்தல் அமைதியாக நடந்தது.

ஆனால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே, துடிப்புடன்பணியாற்றும் அதிமுக கழக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கூட்டணிக்கட்சியினரையும் மதுரை மாநகரத்தை விட்டு வெளியேற்றி, அவர்கள் மீது பொய்யானவழக்குகளை பதிவு செய்தது யார்? அவர்களை சிறையில் அடைத்தது யார்? அதுதிமுகவின் மைனாரிட்டி அரசுதான்.

மதுரை மத்திய தொகுதியில் அதிமகவின் வாக்கு வங்கி குறைந்து விட்டதாக கூறுகிறார்கருணாநிதி. அதிமுக ஒரு எஃகு கோட்டை. அதை அசைத்துப் பார்த்திட யாராலும்முடியாது.

மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலைப் பொருத்தமட்டில்,தேர்தல் ஆணையம் மிகவும் தாமதமாகத்தான் நடவடிக்கை எடுத்தது. அங்குகாவல்துறை அதிகாரிகள் என்னென்ன அட்டூழியம் செய்ய வேண்டுமோஎல்லாவறறையும் செய்து முடித்து விட்டார்கள்.

முறைகேடுகள் நடந்ததாக சில சம்பந்தப்பட்ட அதிகாரிகளே எங்களுக்குத் தகவல்கொடுத்திருக்கிறார்கள். இதனால்தான் மதுரை மத்திய சட்டமன்ற இடைத் தேர்தலில்திமுக வெற்றி பெற்றது.

உள்ளாட்சித் தேர்தலிலும் நியாயமான முறையில் தேர்தல் நடந்திருந்தால் அதிமுகதான்வெற்றி பெற்றிருக்கும். ஆனால் அந்த வெற்றியை திமுக அரசால் சகித்துக் கொள்ளமுடியாது. என்ன விலை கொடுத்தேனும், எப்படியாவது அதிமுக வெற்றி பெறுவதைதடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இத்தகைய அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்கள்.

வெற்றி பெற்றதாக கழக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு கூடதொலைபேசியில் மிரட்டியதால் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாகஅறிவிக்கப்பட்டது. இது சென்னையில் வெளிப்படையாக நடந்தது என்றால் தமிழகம்முழுவதும் மறைமுகமாக நடந்தது.

கடந்த பொதுத் தேர்தலில் சென்னையில் உள்ள 14 சட்டசபைத் தொகுதிகளிலும்அதிமக வெற்றி பெற்றிருக்கும். அப்போதும் திமுக செய்த மோசடியால்தான் 7தொகுதிகளில் மட்டும் வென்றோம்.

சென்னை மாநகராட்சித் தேர்தல் முறையாக நடந்திருந்தால் அதிமுக மாநகராட்சியைகைப்பற்றியிருக்கும். போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கும்.ஆகவே கழகம் எடுத்த முடிவின்படி வெற்றி பெற்றுள்ள 4 வார்டுகளின்கவுன்சிலர்களையும் ராஜினாமா செய்ய சொல்லியிருந்தோம்.

அவர்களில் 2 பேர் தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டார்கள். ராஜினாமாசெய்யாத 2 பேர் கழகத்தின் அடிப்படை உறுபபினர் பொறுப்பிலிருந்துநீக்கப்பட்டுள்ளனர்.

வெற்றி பெற்ற கழக உறுப்பினர்களை தங்கள் கட்சிக்கு இழுப்பதற்காக ரூ. 10 லட்சம்ரூபாய், சொகுசு கார், மேலும் துணைத் தலைவர் பதவி என்றெல்லாம் ஆசை காட்டிக்கொண்டிருக்கிறார்கள் திமுகவினர்.

இந்த ஆசைகளுக்கெல்லாம் மயங்காதவர்களை கொள்கை பிடிப்புடன்இருப்பவர்களை பொய் வழக்கு போட்டுப் பழி வாங்குகிறார்கள்.

துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்த கழகத்தின் வட சென்னை மாவட்டசெயலாளரும், ஆர்.கே.நகர் தொகுதி அதிக சட்டசபை உறுப்பினருமான சேகர்பாபுமீது பொய் வழக்குப் போட்டு அவரை சிறையில் அடைத்திருக்கிறார்கள். தமிழகம்முழுவதும இதே போல துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கழகஉடன்பிறப்புகள் மீது பொய் வழக்குகள் போட்டு அவர்களை துன்புறுத்துகிறார்கள்.

மக்களுக்கு எங்கள் மீது எந்தக் கோபமும் இல்லை. மாறாக, மக்கள் அதிமுக மீதும்,என் மீதும் மாறாப் பற்றும், பாசமும் கொண்டுள்ளார்கள். மக்களின் உண்மையானவிருப்பமும், ஆசையும் சட்டமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும்பிரதிபலிக்கவில்லை. அது செயற்கையாக தடை செய்யப்பட்டது.

அதிமுக உடன்பிறப்புகளுக்கு இந்த நேரத்தில் ஒன்றை சொல்லிக் கொள்ளவிரும்புகிறேன். தைரியமாக இருங்கள், மனம் தளராதீர்கள். அராஜகத்தை எதிர்த்துதுணிந்து போராடுங்கள். எம்.ஜி.ஆர். ஆசியும், மக்கள் ஆதரவும் நமக்குத் துணையாகஇருக்கின்றன.

இவ்வாறு கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+