தமிழகம் முழுவதும் கன மழை: 11 பேர் பலி
சென்னை:தமிழகம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. வீட்டுச் சுவர்இடிந்து விழுந்தது, ஆற்று வெள்ளம், இடி, மின்னல் ஆகியவற்றில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்தகாற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சிநிலையம் தெரிவித்துள்ளது.
நேற்று முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இன்றும் தொடர்ந்து மழைபெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் அதிக அளவில் மழை பெய்துள்ளது. இங்கு தொடர்ந்து 2நாட்களாக பெய்து வரும் மழையால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்துள்ளது. இடி தாக்கி இங்கு 4 பேர்உயிரிழந்தனர்.
இதேபோல விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.சென்னை நகரில் இன்று காலை முதல் விட்டு விட்டு கன மழை பெய்து கொண்டுள்ளது. பல இடங்களில்இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்துள்ளது.
இதனால் நகரின் பல பகுதிகள் வெள்ளக் காடாக மாறியுள்ளன.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழ்வு நிலை அப்படியே நிலை கொண்டிருப்பதால் மழை மேலும் சில நாட்களுக்குநீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
ஆற்றில் மூழ்கி அண்ணன், தம்பி, தங்கை பலி:
தஞ்சை மாவட்டம் மெலட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவரது மகன்கள் ராஜ்மோகன் (வயது18), சரவணன் (12), மகள் திவ்யா (14). தீபாவளி தினத்தன்று, மூன்று பேரும் வெண்ணாற்றில் குளிக்கச்சென்றனர்.
மெலட்டூர் அருகே உள்ள காந்தவனம் என்ற இடத்தில் இவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில்வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், அங்கிருந்த சேற்றில் (புதைமணல்) சிக்கி மூன்று பேரும் உயிரோடு புதைந்துபலியாயினர்.
சுவர் இடிந்து 3 பேர் சாவு:
திண்டுக்கல் அருகே வேடப்பட்டி என்ற இடத்தில், சின்னத்துரை என்பவர் தனது குடிசை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அவருடன் மனைவி பெத்தாயி, பேத்தி லட்சுமி ஆகியோரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இவர்களது பக்கத்து குடிசை வீடு யாரும் இல்லாமல் காலியாக கிடந்தது. கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால், அந்த வீட்டின் சுவர் பலவீனமானது. இன்று அதிகாலை அந்த வீட்டின் சுவர் இடிந்து சின்னத்துரையின்வீடு மீது விழுந்தது.
இதில் சின்னத்துரையின் வீட்டின் சுவரும் இடிந்து விழுந்ததில், தூங்கிக் கொண்டிருந்த சின்னத்துரை, பெத்தாயி,லட்சுமி ஆகியோர் இடிபாட்டில் சிக்கினர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
கூரை இடிந்து ஒருவர் பலி:இதேபோல சென்னை அருகே திருவொற்றியூரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ராவ் என்பவர்இறந்தார். அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் படுகாயத்துடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாகராவ் குடியிருந்த வீட்டின் உரிமையாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications