மீண்டும் மதுரை ஆணையர் ஆன சிதம்பரசாமி
மதுரை:மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பதவியிலிருந்து தேர்தல் ஆணையத்தால்இடமாற்றம் செய்யப்பட்ட சிதம்பரசாமி, ஐ.ஜியாக பதவி உயர்த்தப்பட்டு மதுரைமாநகர காவல்துறை ஆணையராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மத்திய தொகுதிக்கு இடைத் தேர்தல் நடந்தபோது மதுரை காவல்துறைஆணையராக இருந்தவர் சிதம்பரசாமி. தொகுதியில் திமுக, அதிமுகவினர் இடையேநிடந்த கலவரம் மற்றும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க காவல்துறைதவறி விட்டதாக கூறி சிதம்பரசாமியும், வேறு சில உயர் காவல் அதிகாரிகளையும்தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்தது.
இதையடுத்து சிதம்பரசாமி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
தேர்தல் முடிவடைந்த நிலையில் டிஐஜியாக இருந்து வந்த சிதம்பரசாமி தற்போதுஐஜியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். அத்தோடு மதுரை மாநகர காவல்துறைஆணையராகவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல கோவை மாநகர காவல்துறை ஆணையராக ரயில்வே ஐஜி சி.கே.காந்திராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications