ரம்ஜான்- முதல்வர், வைகோ வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:இஸ்லாமியர்களின் புனிதத் திருநாளான ரம்ஜான் பண்டிகை தமிழகம் முழுவதும் நாளைகொண்டாடப்படுகிறது. வளைகுடாவிலும், கேரளத்திலும், கோவையிலும் இன்றே ரம்ஜான்கொண்டாடப்பட்டுவிட்டது.

ரம்ஜானையொட்டி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

ரம்ஜான் திருநாள் தமிழகம் முழுவதும் மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியமக்களுக்குரிய ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்று ரமலான் மாதத்தில் பகல் பொழுதில் தண்ணீர் உட்படஎதனையும் உண்ணாமல் நோன்பிருத்தலாகும்.

ஒரு நாள், இரு நாள் அல்ல, ரமலான் மாதம் முழுவதும் உடலை வருத்திக் கொண்டு நோன்பிருந்து, சமுதாயத்தில்சகோதரத்துவம், சமத்துவம், சகிப்புதன்மை ஆகியவற்றை வளர்க்கவும், ஏழை, எளியோருக்கு இயன்ற வகையில்எல்லாம் உதவவும், உறுதி எடுத்துக் கொள்ளும் இஸ்லாமியச் சகோதரர்களின் வாழ்வில் வளம் கொழிக்கவும்,நலம் செழிக்கவும் என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.

அண்ணல் நபிகளார், உலக மனித குலத்தை நோக்கி, மனித உடலில் ஒரு தசைத் துண்டு உண்டு. அதுஆரோக்கியமாக இருந்தால், மனித வாழ்வே நன்றாக இருக்கும். அந்த தசைத் துண்டு கைவிட்டாலோஅனைத்தமே கெட்டு விடும். அதுதான் இதயம் என்று கூறி மனித வாழ்வு சிறக்க, அவர்களின் இதயம்தூய்மையாக இருக்க வேண்டும் என்றார்.

நபிகள் நாயகப் பெருமகனார் சுட்டிக் காட்டும் இதய தூய்மையை வாழ்வில் கடைப்பிடித்த தனி மனித வாழ்வில்மட்டுமல்லாமல், உலக மாந்தர் அனைவர் வாழ்விலும், அன்பும், அமைதியும் தவழச் செய்வோம் என்று இந்ததிருநாளில் உறுதி ஏற்போமாக என்று கூறியுள்ளார் கருணாநிதி.

வைகோ வாழ்த்து:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ஒரு மாத காலம் பகல் பொழுதுகளில்அறவே உண்ணாமலும், பருகாமலும், துய்க்காமலும் கடைப்பிடித்த நோன்பின் மாண்பாக, ஈதல் இசைபடவாழ்தல் என்று ஜக்காத் என்னும் ஏழை வரியைக் கடமையாகக் கொண்டு எளியவர்களுக்கு புரவலராகிடும்பொன்னாள் இந்த நன்னாள்.

தமிழக இஸ்லாமிய பெருமக்கள் இந்த நாளில் ஈத்துவக்கும் இன்பம் துய்த்து பிற சமூகத்தாரோடு விருந்து உண்டுமகிழ்ந்து, சமுதாய நல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டாக வாழ்வது பாராட்டத்தக்கது ஆகும்.

மனித குலத்திற்கு அழகிய முன் மாதிரி என திருமறை சுட்டிக காட்டுவதற்கு ஏற்ப நல்லிணக்கம் பேணி, சமூகஒற்றுமை காத்து நிற்க சூளுரை மேற்கொள்வோம் என இன்று இஸ்லாமிய பெருமக்களுக்கு என் இதயவாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+