இன்று மாலை மத்திய அமைச்சரவை மாற்றம்
டெல்லி:மத்திய அமைச்சரவையில் இன்று மாலை மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது. வெளியுறவு அமைச்சராக பிரணாப்முகர்ஜி பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வெளியுறவுத் துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட சில இலாகாக்களுக்கு அமைச்சர்கள் இல்லாத நிலை உள்ளது.
நீண்ட நாட்களாக இந்தப் பொறுப்புகள் காலியாக இருப்பதால் அவற்றுக்கு அமைச்சர்களை நியமிக்க பிரதமர்மன்மோகன் சிங் முடிவு செய்தார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமரும் நேற்றுமாலை தீவீர ஆலோசனை நடத்தினர்.
இதன் இறுதியில் யாருக்கு எந்த அமைச்சர் பொறுப்பு என்பது குறித்து இறுதி செய்யப்பட்டது. இதையடுத்துஇன்று மாலை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில், இரவு 7.30மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர். அவர்களுக்கு குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.பாதுகாப்புத் துறைக்கு எஸ்.எம்.கிருஷ்ணா அல்லது திக் விஜய் சிங் ஆகியோரில் ஒருவர் பதவியேற்கக் கூடும்.ஏ.கே.அந்தோணிக்கு தொழிலாளர் நலத்துறை வழங்கப்படலாம்.
கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பியும், நடிகருமான அம்பரீஷுக்கும் இணை அமைச்சர் பதவிவழங்கப்படும் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications