காதல் சவால்: உயிரை விட்ட என்ஜீனியர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:பெண் என்ஜீனியரை மணக்க இரண்டு கம்ப்யூட்டர் என்ஜீனியர்களுக்கிடையே போட்டி ஏற்பட்டது. இதில் தோற்றஎன்ஜீனியர் தற்கொலை செய்து கொண்டார். வெற்றி பெற்றவர், அந்தப் பெண்ணுடன் அமெரிக்காவுக்குப் போய்செட்டிலாகி விட்டார்.

சென்னை காவல்துறை ஆணையர் லத்திகா சரணை சந்தித்து நாகராஜன் என்பவர் ஒரு புகார் மனுவைக்கொடுத்தார். நூதனமான ஒரு காதல் போட்டி குறித்து அந்த புகாரில் கூறியிருந்தார் நாகராஜன். புகார் மனுவில்கூறப்பட்டிருந்ததாவது:

எனது சொந்த ஊர் மதுரை திருப்பரங்குன்றம். திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள எனது சகோதரியின் வீட்டில்வசித்து வருகிறேன். எனது அண்ணன் சீனிவாசன். அவர் சாந்தி என்ற பெண்ணைக் காதலித்தார். அவர்விருதுநகரைச் சேர்ந்தவர். இருவரும் ஒரே பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள் என்பதால் காதல் மலர்ந்தது.

இருவரும் ஒரே ஜாதி என்பதால் இரு வீட்டினரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். படிப்பை முடித்த பிறகும்கூட காதல் வெற்றிகரமாக நீடித்தது. இந்த நிலையில் இரு வீட்டாரும் திருமண நிச்சயதார்த்தத்தையும் நடத்தினர்.இந்த நிலையில் ஜாகதத்தில் குறைபாடு இருப்பதால் திருமணத்தை தள்ளிப் போட வேண்டும் என சாந்தியின்பெற்றோர் கூறியதால் திருமணம் தள்ளிப் போடப்பட்டது.

அதன் பின்னர்தான் சாந்தியின் போக்கில் மாறுதல் தென்பட ஆரம்பித்தது. அவர் வடபழனியில் உள்ளகம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்ற ஆரம்பித்தார். எனது அண்ணனும் டைடல் பூங்காவில் உள்ள ஒருநிறுவனத்தில் மாதம் ரூ. 60,000 சம்பளத்திற்கு வேலை பார்க்க ஆரம்பித்தார்.

சாந்தி, தன்னுடன் பணியாற்றிய ரமேஷ் என்பவருடன் பழக ஆரம்பித்தார். எனது அண்ணனை புறக்கணிக்கஆரம்பித்தார். இதை எனது அண்ணன் கண்டித்தார். ஏற்கனவே திருமணம் நிச்சயமான பின்னர்இன்னொருவருடன் பழகுவது சரியல்ல என்று அவர் எடுத்துக் கூறினார். ஆனால் சாந்தி அதைகண்டுகொள்ளவில்லை.

ரமேஷ் ஏற்கனவே கல்யாணமாகி ஒரு குழந்தைக்கும் தந்தையானவர். சாந்தியை எனது அண்ணனிடமிருந்துபிரிக்கும் நோக்கில் அவர் செயல்பட்டார். எனது அண்ணனிடமே சவால் விட்டார். சாந்தி இனிமேல் உனக்குக்கிடையாது. மறந்து விட்டு ஒதுங்கிக் கொள். சாந்தி உன்னை விரும்பவில்லை என்று கூறினால் உயிரை விட்டுவிடுவாயா என்று சவால் விட்டார்.

இதை எனது அண்ணன், சாந்தி மீது இருந்த நம்பிக்கையால் ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் சாந்தியைவற்புறுத்தி, எனது அண்ணன் மீது வட பழனி காவல் நிலையத்தில் அதிக வரதட்சணை கேட்பதாக கூறி பொய்புகார் கொடுக்க வைத்தார் ரமேஷ்.

போலீஸார் சாந்தி முன்னிலையில் எனது அண்ணனை வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது எனதுஅண்ணனை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்று சாந்தி கூறினார். இதைக் கேட்டதும் ரமேஷ்,போலீஸார் முன்னிலையிலேயே பலமாக சிரித்துள்ளார். பிறகு எனது அண்ணனிடம், சாந்தியிடம் திருமணம்செய்து கொள்ளுமாறு வற்புறுத்த மாட்டேன் என எழுதி வாங்கியுள்ளனர்.

காவல் நிலையத்திலிருந்து எனது அண்ணன் வெளியேறும்போது ரமேஷ் அவரிடம், சவால் விட்டபடி தற்கொலைசெய்து கொள்வாயா என்று எகத்தளாமாக கேட்டுள்ளார். இந்த சம்பவத்திற்குப் பின்னர் எனது அண்ணன் மனம்உடைந்து காணப்பட்டார். நண்பர்களிடம் புலம்பியபடி இருந்துள்ளார். சாந்தியின் தந்தையைப் பார்த்துப்பேசியபோது, எனது மகளை மறந்து விடு என்று அவர் கூறியுள்ளார்.

இப்படி அனைவரும் அவமானப்படுத்தி விட்டதால் மனம் உடைந்த அவர் கடந்த 16ம் தேதி தற்கொலை செய்துகொண்டு விட்டார். எனது அண்ணனின் சாவுக்கு சாந்தியும், ரமேஷும்தான் முழுக் காரணம். இருவர் மீதும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு குறித்து விசாரணை நடத்துமாறு ஆவடி உதவி ஆணையருக்கு லத்திகா சரண் உத்தரவிட்டார்.

காதல் பந்தயம் போட்டு சாந்தியை தட்டிச் சென்ற ரமேஷ் தற்போது சாந்தியுடன் அமெரிக்காவுக்குப் பறந்துவிட்டாராம். அங்கு ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் இருவரும் வேலை பார்த்து வருவதாக நாகராஜன்தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+