விமானத்தை விட்டு இறங்க மறுத்த பயணிகள்
கோவை:சென்னையிலிருந்து கோவை சென்ற தனியார் விமானம் படு தாமதமாக கிளம்பியதால், அதில் பயணித்தபயணிகள், விமானத்திலிருந்து இறங்காமல் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையிலிருந்து கோவைக்கு இயக்கப்படும் தனியார் விமானம், தினசரி காலை 6.10க்கு புறப்பட்டு 7.20மணிக்கு கோவையை அடையும். நேற்று காலையும் அந்த விமானம் புறப்படத் தயாராக இருந்தது. விமானத்தில்கோவை செல்வதற்காக 42 பயணிகள் அமர்ந்திருந்தனர்.
ஆனால் விமானம் கிளம்புவதாக தெரியவில்லை. கிட்டத்தட்ட 3 மணி நேரம் தாமதமாக காலை 10.25மணிக்குத்தான் விமானம் கோவையை சென்றடைந்தது.இதனால் கடுப்பான பயணிகள், கோவையில் விமானம் தரையிறங்கியதும் விமானத்தை விட்டு இறங்காமல்போராட்டத்தில் இறங்கினர். 12 பேர் மட்டும் இறங்கிச் சென்று விட்டனர். ஆனால் மற்ற 30 பேரும் இறங்கமறுத்து போராட்டத்தில் குதித்ததாதல் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
விமான நிலைய இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் பயணிகளை சமாதானப்படுத்தினர். ஆனால் சம்பந்தப்பட்டவிமான நிறுவன அதிகாரிகள் வந்து சமாதானப்படுத்தினால் தான் போராட்டத்தைக் கைவிடுவோம் எனபயணிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட விமான நிறுவன அதிகாரிகள் விரைந்து வந்து பயணிகளிடம், இனிமேல் இதுபோலகால தாமதம் ஆகாது என்று சமாதானப்படுத்தினர். மேலும் அனைத்துப் பயணிகளுக்கும் ஒரு இலவசடிக்கெட்டையும் வழங்கினர். இந்த டிக்கெட்டைப் பயன்படுத்தி இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னைக்கு பயணிகள்இலவசமாக செல்ல முடியும்.
இதனால் சமாதானமடைந்த பயணிகள் போராட்டத்தை முடித்துக் கொண்டு கிளம்பிச் சென்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications