நடுநிலை தவறிய போலீசார்: ஜெ கடும் புகார்
சென்னை:அதிமுக கவுன்சிலர்களை திமுகவினர் கடத்திச் செல்வதைத் தடுக்காமல் போலீஸார் நடுநிலை தவறி நடந்துகொள்வதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கருணாநிதி தலைமையிலான மைனாரிட்டி திமுக அரசு, நாடேநடுங்கும் வகையில், வன்முறைகளையும், அராஜகங்களையும், குண்டர்கள் மற்றும் காவல்துறையினரின்உதவியோடு உள்ளாட்சித் தேர்தல் என்ற நாடகத்தை நடத்தியுள்ளது.
தற்போது வெற்றி பெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவியேற்பின்போதும் தமிழகம் முழுவதும் வன்முறைகள்கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதோடு, வெற்றி பெற்ற கழக உறுப்பினர்களை கடத்திச் செல்வதும், கழக நிர்வாகிகள்மற்றும் தொண்டர்களை தாக்குவதும் தொடர் கதைகயாக நிகழ்ந்து வருகின்றன.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட டி.சுப்புலாபுரம் ஒன்றியக் குழு உறுப்பினராககழகத்தைச் சேர்ந்த சேட்டு வெற்றி பெற்றுள்ளார்.
ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் அதிமுக கூட்டணி 10 இடங்களையும் திமுக கூட்டணி 9 இடங்களையும்வென்றுள்ள நிலையில் பதவியேற்பு முடிந்து அலுவலகத்தை விட்டு சேட்டு வெளியே வந்தபோது ஆண்டிப்பட்டிஒன்றிய திமுக செயலாளர் வைகை சேகர் தலைமையில் 10 வாகனங்களில் வந்த திமுகவினர் சேட்டுவை கடத்திச்சென்றுள்ளனர்.
காவல்துறையினர் முன்பே இது நடந்துள்ளது. இதுதொடர்பாக தேனி மாவட்ட செயலாளரும், எம்.பியுமானதங்கத் தமிழ்ச் செல்வன் மாவட்ட எஸ்.பியிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும்இல்லை. எனவே காவல்துறையினர் நடுநிலையை உணர்ந்து, உடனடியாக சேட்டுவை மீட்டு அவரதுகுடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.
அதேபோல மதுரை புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள்பதவியேற்பின்போது, திமுக வன்முறைகளை கட்டவிழ்த்து நிகழ்த்தியதோடு, மாவட்ட கழக செயலாளர்ஜெயராமனையும், உடன்பிறப்புகளையும் கடுமையாக தாக்கி காயப்படுத்தி, கழகத்தினர் மீதே வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
இதேபோன்ற அத்துமீறல்களை, 28ம் தேதியன்று தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கானதேர்தலின்போதும், வன்முறைகளை நிகழ்த்த திமுகவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
வெற்றி பெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிப்பிரமாணம் ஏற்பு மற்றும் தலைவர், துணைத் தலைவர் தேர்தல்அமைதியான சூழலில் நடைபெறும் என அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
காவல்துறையினர் நடுநிலையோடு இந்த வாக்குறுதியை செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications