கர்நாடக முதல்வர் மகனுக்கு அடி, உதை!
பெங்களூர்:பெங்களூரில் உள்ள ஹோட்டலில் தனது நண்பர்களுடன் ரகளையில் ஈடுபட்டகர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் கெளடாவை, ஹோட்டல்நிர்வாகிகளும், ஊழியர்களும் சேர்ந்து சரமாரியாக அடித்து, உதைத்ததால் அவர்காயமடைந்தார்.
கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் கெளடா. இவர் நேற்று நள்ளிரவுபெங்களூரில் உள்ள எம்பயர் என்ற ஹோட்டலுக்கு தனது நண்பர்களுடன்சென்றுள்ளார். தங்களுக்கு சாப்பாடு வேண்டும் என்று நிகில் கெளடா கூறியுள்ளார்.
ஆனால் நேரம் கடந்து விட்டதால் சாப்பாடு காலியாகி விட்டது என ஹோட்டல்ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த நிகில் கெளடாவும், அவரதுநண்பர்களும், ஹோட்டலில் இருந்த மேசை, நாற்காலிகளை தூக்கிப் போட்டுஉடைத்தனர். ஹோட்டல் கண்ணாடிகளையும் அடித்து உடைத்தனர்.
இதைப் பார்த்ததும் ஆத்திரமடைந்த ஹோட்டல் நிர்வாகிகளும், ஊழயிர்களும் சுற்றிவளைத்து நிகில் கெளடா மற்றும் நண்பர்களை சரமாரியாக அடித்து உதைத்தனர். அடி,உதை தாங்க முடியாமல் நிகில் கெளடாவும், அவரது நண்பர்களும் அலறியுள்ளனர்.
இருந்தும் விடாமல் தாறுமாறாக அடித்ததில் அனைவரும் காயமடைந்தனர்.இதையடுத்து நிகில் கெளடாவும், அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பித்துவெளியேறினர். பின்னர் நிகில் கெளடா தனியார் மருத்துவமனை ஒன்றில்அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வரின் மகன் நள்ளிரவில் ஹோட்டலில் ரகளையில் ஈடுபட்டு அடி, உதைவாங்கியது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications