கருணாநிதி கையில் வாள் விஜய்காந்த்: அதிமுக
சென்னை:எம்.ஜி.ஆர். ரசிகன் என்று கூறிக் கொள்ளும் விஜயகாந்த், கடந்த கால எம்.ஜி.ஆர்.ஆட்சியையும் சேர்த்து குறை கூறி கடந்த சட்டசபைத் தேர்தலில் பிரசாரம் செய்தது ஏன்என்று அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கை:
உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் குண்டர் பலம், பண பலம், அதிகார பலம்ஆகியவற்றையும் தாண்டி, இதுவரை நடந்திராத மோசடித் தேர்தலை திமுக நடத்திமுடித்துள்ள நிலையில், கழகம் தனது நிலையை உறுதிப்படுத்தி 21 சதவீதஇடங்களைப் பிடித்துள்ளது.
நம்மை சிறுமைப்படுத்த வேண்டும் என்று கருணாநிதியும், அவரது காவல்துறையின்உளவுப் பிரிவும், அதிமுக, தேமுதிகவை விட பின் தங்கியுள்ளதாக ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி அதனை பத்திரிகைகளிலும் வரச் செய்வதில் முழு மூச்சுடன்ஈடுபட்டு இதன் மூலம் ஒரு அற்ப சந்தோஷத்தை அனுபவித்து வருகின்றனர்.
நேற்று தோன்றிய தேமுதிக முன்னுக்கு வந்து விட்டதாகவும், தனக்னெ தனி வாக்குவங்கியை உருவாக்கி விட்டதாகவும், முற்றிலும் உண்மைக்குப் புறம்பான ஒரு கருத்துவிதைக்கப்பட்டு வருகிறது. தேமுதிக வெறும் 3 சதவீத இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இதை வெற்றியை மதிமுகவும் பெற்றிருக்கிறது என ஜெயலலிதா தனதுஅறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் தேமுதிக 100 சதவீதஇடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றது 3 சதவீதம் ஆகும். ஆனால் மதிமுகவோ17.5 சதவீத இடங்களில் மட்டுமே போட்டியிட்டு 3 சதவீத இடங்களைப்பிடித்துள்ளது. 100 சதவீதம் எங்கே? 17.5 சதவீதம் எங்கே? இந்த வகையில்பார்த்தால் மதிமுக பெற்றுள்ள வெற்றிதான் மகத்தான வெற்றி.
விஜயகாந்த் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில், வாய்ப்பு குன்றியதும், அரசியல் பக்கம்வருவது ஜனநாயகத்தில் நடக்கக் கூடியதுதான். ஆனால் அரசியலுக்கு வந்ததும் தனதுகடந்த கால வாழ்வை அப்படியே புறந்தள்ளி விட்டு எல்லோரையும்ஒட்டுமொத்தமாக விமர்சனம் செய்வது சரியல்ல.
விஜயகாந்த் மூத்தவர்களுக்கு மரியாதை தர வேண்டும். பேசும்போது யோசித்துப் பேசவேண்டும். நாவை அடக்கிப் பேச வேண்டும்.
எம்.ஜி.ஆர். ரசிகன், அவர் எனது ஆசான் என்று கூறிக் கொள்ளும் விஜயகாந்த்,தேர்தல் சமயத்தில் சுற்றுப்பயணம் செய்யும்போது, அதிமுகவும், திமுகவும் சேர்ந்துநாட்டையே கெடுத்து விட்டன என்று குறிப்பிட்டு திராவிட ஆட்சிகள் மக்களைஏமாற்றி விட்ட என்று பேசியுள்ளார்.
எம்.ஜி.ஆர். 11 ஆண்டு காலம், மொத்தம் 3 முறை ஆட்சி செய்தார். அவரது ஆட்சிமோசடி ஆட்சியா? அவர் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லையா? எம்.ஜி.ஆர்.ரசிகன் என்று சொல்லிக் கொண்டு விஜயகாந்த் இப்படி முன்னுக்குப் பின் முரணாகப்பேசி மக்களை ஏமாற்றக் கூடாது.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது எம்.ஜி.ஆர். ஆட்சியைக் குறை கூறி விட்டுஇப்போது எம்.ஜ.ஆர். ரசிகன் என்று கூறிக் கொள்வது எந்த வகையில் நியாயம்?
கருணாநிதி நம்மை சிறுமைப்படுத்த முன்பு எடுத்துக் கொண்ட ஆயுதம் கோப்பு.இப்போது தேமுதிக என்பதைப் பார்க்கும்போது நமது எதிரிகளின் கையில் வாளாகஇருப்பவர்களின் உண்மைத் தன்மை என்ன என்பது மக்களுக்குப் புரிய ஆரம்பித்துவிட்டது என்று கூறியுள்ளார் பன்னீர் செல்வம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications