ரஷ்ய பெண்களை கவரும் இந்திய ஆண்கள்!
மாஸ்கோ:இந்திய ஆண்கள்தான் சிறந்த கணவர்களாக இருக்கிறார்கள் என ரஷ்ய பெண்கள் கருதுவதாக ரஷ்யாவைச்சேர்ந்த பெண்ணுரிமை இயக்க பிரமுகர் மரியா அர்பட்டோவா தெரிவித்துள்ளார்.
ரஷ்ய பெண்கள் மணக்க விரும்பும் வெளிநாட்டுக்காரர்கள் வரிசையில் இந்தியர்களுக்குத்தான் முதலிடம்கொடுக்கிறார்களாம். இதற்கு என்ன காரணம் என்று மரியா அர்பட்டோவோ விளக்குகிறார்.
இந்திய ஆண்கள் உணர்ச்சிகரமானவர்கள். பிரச்சினைகளை கண்டு பயந்து ஓடுவதில்லை. தங்களதுமனைவிகளுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் ஆறுதலாக இருக்கிறார்கள், பேசுகிறார்கள். பிரச்சினையைத்தீர்க்க முயலுகிறார்கள்.
மனதில் ஒன்றும், வெளியில் ஒன்றுமாக அவர்கள் நடந்து கொள்வதில்லை. தாங்கள் சூப்பர் மேன் என்ற எண்ணம்அவர்களுக்கு சுத்தமாக கிடையாது. சாதாரணமாக நடந்து கொள்கிறார்கள். குடும்ப உறவுகளுக்கு மிகுந்தமரியாதையும், முக்கியத்துவமும் கொடுக்கிறார்கள்.
மேற்கத்திய ஆண்கள் போல அழ நினைத்தால் அடக்கிக் கொண்டு நடிப்பதில்லை இந்தியர்கள். மாறாக, வாய்விட்டு அழக் கூடத் தயங்குவதில்லை என்று இந்திய ஆண்களுக்கு புகழாரம் சூட்டுகிறார் மரியா.
இவரே இதற்கு முன்பு 2 வெளிநாட்டுக்காரர்களை கல்யாணம் செய்து கொண்டு விவகாரத்து செய்து விட்டுஇப்போது 3வதாக இந்தியர் ஒருவரையே மணந்து குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகிறாராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications