தமிழகத்தை கலக்கும் கஞ்சா ஐஸ்கிரீம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை நகரில் ஐஸ்கிரீமில் கஞ்சாவைக் கலந்து விற்கும் கும்பலைப் பிடிக்கபோலீஸார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.

சென்னை நகரில் கல்லூரி மாணவர்கள், இளம் பெண்கள் உள்ளிட்டோருக்கு போதைப்பொருட்களை விற்கும் கும்பல், காவல்துறைக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.

பல ரூபங்களில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்கப்படுவதால் போலீஸார்அவற்றை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்கள். சமீபத்தில் ஒரு ராஜஸ்தானைச்சேர்ந்த ஒரு சாமியாரை போலீஸார் கைது செய்தனர். பிரசாத வடிவில் அவர் கஞ்சாவிற்று வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீஸார் பல்வேறு விதமானநிடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இந் நிலையில் சென்னை நகரை கஞ்சா ஐஸ்கிரீம்கலக்க ஆரம்பித்துள்ளது தெரியவந்துள்ளது.

கஞ்சா இலையை தூளாக்கி அதை ஐஸ்கிரீமில் கலந்து விற்பது அதிகரித்து வருவதாகபோலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. நேரடியாக கஞ்சாவை நுகர்ந்தால் அதுவாயில் கடும் நாற்றத்தை ஏற்படுத்தும். அதற்குப் பதில் ஐஸ்கிரீம், சாக்லேட்போன்றவற்றில் கலந்து பயன்படுத்தினால், வாயும் நாறாது, போதையும் அவ்வளவுசீக்கிரம் இறங்காது.

மேலும் கஞ்சா அடிப்பதும் வெளியில் தெரியாது.

இதனால்தான் கஞ்சாவை சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீமில் கலந்து போதைப் பொருள்கும்பல் விற்கத் தொடங்கியுள்ளது. இந்த வகை கஞ்சாவுக்கு கல்லூரி மாணவர்கள்,இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

கஞ்சா ஐஸ்கிரீம், சாக்லேட்டுகளை விற்கும் கும்பலைப் பிடிக்க தீவிர நடவடிக்கைஎடுக்கப்பட்டிருப்பதாக சிபிசிஐடி பிரிவு சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜி சேகர்தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், கஞ்சா சாக்லேட் கும்பலை கிட்டத்தட்ட பிடித்துவிட்டோம். இனிமேல் கஞ்சா சாக்லேட் அவ்வளவு எளிதில் கிடைக்காது. ஆனால்ஐஸ்கிரீம் கும்பலைப் பிடிக்கத்தான் தற்போது வலை வீசியுள்ளோம்.

விரைவில் இக்கும்பலும் பிடிபட்டு விடும். இவற்றை விற்கும் கும்பல் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களும், இளைஞர்களும் கஞ்சாவை எந்தரூபத்தில் பயன்படுத்தினாலும் கடும் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.

மாநில போதைப் பொருள் தடுப்புப் போலீஸார் இந்த ஆண்டு மட்டும் கஞ்சாஉள்ளிட்ட போதைப் பொருட்களை விற்ற 10 பேரைப் பிடித்து குண்டர் சட்டத்தில்சிறையில் அடைத்துள்ளனர்.

கடந்த மாதத்தில் மட்டும் 7 பேர் சிக்கியுள்ளனர். தமிழக போதைப் பொருள் தடுப்புப்பிரிவுக்கு புதிதாக 7 மோப்ப நாய்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த நாய்களுக்குசிறப்புப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன என்றார் சேகர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+