பிரதமரை கொல்வோம்-அச்சுதானந்துக்கு இமெயில்
திருவனந்தபுரம்:நவம்பர் 1ம் தேதி கேரளாவுக்கு வரும் பிரதமர் மன்மோகன் சிங்கை கொலை செய்வோம் என இ-மெயில் மூலம்கேரள முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து கேரளா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் நவம்பர் 1ம் தேதி கேரளாவுக்கு வருகிறார். இந் நிலையில் கேரள முதல்வர்அச்சுதானந்தன், அமைச்சர்கள், சில உயர் அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு
இ-மெயில் மிரட்டல் வந்துள்ளது.
அந்த மெயிலில், கேரளாவுக்கு வரும் பிரதமரை தீர்த்துக் கட்டுவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து அச்சுதானந்தன், போலீஸ் துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் மற்றும் உயர் காவல்துறைஅதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின் அமைச்சர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கேரளா முழுவதும் பாதுகாப்புபலப்படுத்ப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மிரட்டல் மெயில் கொச்சியில் உள்ள ஒரு இன்டர்நெட் மையத்திலிருந்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த மையத்தின் உரிமையாளர் உள்பட 3 பேரை விசாரணைக்கு போலீஸார் அழைத்துச்சென்றுள்ளனர். டிஐஜி பத்மகுமார் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மெயிலில் உள்ள முழுவிவரங்களை இப்போது வெளியிட முடியாது.
திருவனந்தபுரம் வரும் பிரதமர் மன்மோகன்சிங் அங்கு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கொல்லத்திலும் ஒருநிகழ்ச்சியில் பங்கேற்கிறார். எனவே இந்த இரு மாவட்டங்களிலும் முழு அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடந்த முறை கேரளாவுக்கு வந்தபோது தபால் குண்டு வெடித்து பரபரப்புஏற்பட்டது. அதுபோன்ற சம்பவம் இந்த முறை நடந்து விடாமல் தடுக்கும் பொருட்டு தீவிர கண்காணிப்புக்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் பாலகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications