எம்ஜிஆர் ஆட்சியை குறை சொன்னேனா-விஜயகாந்த்
மதுரை:அதிமுக தலைவர்கள் விடும் அறிக்கைகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை.தேமுதிகவுக்கு இனி ஏறுமுகம்தான் என்று அக் கட்சியின் தலைவரும், நடிகமானவிஜயகாந்த் கூறியுள்ளார்.
விஜயகாந்த் குறித்து ஜெயலலிதா காட்டமாக அறிக்கை விட அதற்கு விஜயகாந்த்தும்படு காட்டமாக பதில் அளித்தார். இதைத் தொடர்ந்து விஜயகாந்த்தை விமர்சித்துமுன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர்அறிக்கை விட்டனர்.
இதற்கு விஜயகாந்த் பதில் தராமல் இருந்து வருகிறார். இந் நிலையில் மதுரைமாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தேமுதிக கவுன்சிலர்களின்ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு விஜயகாந்த்பேசினார்.
அப்போது, நான் எம்.ஜி.ஆர். ஆட்சியை குறை கூறியதாக கூறுகிறார்கள். நான்ஒருபோதும் எம்.ஜி.ஆர். ஆட்சியை குறை கூறியது இல்லை. இதுதொடர்பாக அதிமுகதலைவர்கள் விடும் அறிக்கைகளுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை.
கருணாநிதியின் முந்தைய ஆட்சிகளையும், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகஆட்சியையும்தான் நான் குறை கூறிப் பேசியுள்ளேன். ஒருபோதும் எம்.ஜி.ஆர்.ஆட்சியை நான் விமர்சனம் செய்ததில்லை.
இனி தேமுதிகவுக்கு ஏறுமுகம்தான். மக்கள் நம்பிக்கையை பெற்று நமது கட்சி வளரஆரம்பித்து விட்டது. நமது கழகம் வளர்ந்து வரும் கட்சி.
மதுரை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தேமுதிக கவுன்சிலர்கள் தங்களதுதனித்துவத்தை இழந்து விடக் கூடாது. தங்கள் பகுதிகளின் அடிப்படைத் தேவைகளைநிறைவேற்றுவதிலும், நகரின் வளர்ச்சியிலும் ஆர்வம் காட்டி செயல்பட வேண்டும்என்றார் விஜயகாந்த்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications