கடலில் மூழ்கிய படகுகள்: 200 மீனவர்கள் கதி?

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டனம்:நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடலில் 200க்கும் மேற்பட்டமீனவர்கள் சென்ற 50 படகுகள் கடலில் மூழ்கின. மீனவர்கள் கதி என்ன ஆனது என்றுதெரியாததால் கோடியக்கரையில் பீதி நிலவுகிறது.

கோடியக்கரையில் தற்போது மீன் பிடி சீசன் சூடு பிடித்துள்ளது. இதனால்புதுக்கோட்டை, கடலூர், கன்னியாகுமரி, நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளைச்சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரைக்கு வந்து முகாமிட்டு மீன் பிடித்த வண்ணம்உள்ளனர்.

தற்போது வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளதாலும், வங்கக் கடலில் புயல்சின்னம் நிலை கொண்டிருப்பதாலும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால்மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் வெளியூர் மீனவர்கள் 200க்கும் மேற்பட்டோர் 50க்கும் மேற்பட்டபடகுகளில் கடலுக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடலில் ஏற்பட்டகொந்தளிப்பில் அவர்கள் சிக்கினர்.

இதில் ஒரு படகு சிக்கி மூழ்கியது. அதில் இருந்த 4 மீனவர்கள் நீச்சலடித்து கரைக்குவந்து சேர்ந்தனர். தங்களது அத்தனை படகுகளும் கடலில் மூழ்கி விட்டதாகவும், மற்றமீனவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை என்று அவர்கள் கூறிய தகவலால்பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கடல் படைக்கும், கடலோரக் காவல் படைக்கும் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலில் மூழ்கிய மீனவர்களை மீட்கும் முயற்சிமேற்கொள்ளப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+