ஜெ. பேரவை பொறுப்பு: நயினாரிடமிருந்து பறிப்பு!
சென்னை:முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனிடமிருந்த ஜெ. பேரவை செயலாளர்பொறுப்பிலிருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள் நயினார் நாகேந்திரன் மற்றும் செ.மா.வேலுச்சாமிஆகியோரது வீடுகள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட30க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பப் போலீஸார் அதிரடி சோதனைநடத்தினர்.
இந்த சோதனையில் செ.மா.வேலுச்சாமி வீட்டிலிருந்து ஆயிரம் ரூபாய், 500 ரூபாய்நோட்டுக் கட்டுக்கள் சூட்கேஸ்கள் நிறைய பறிமுதல் செய்யப்பட்டதாககூறப்படுகிறது. இதேபால நாகேந்திரனுக்குச் சொந்தமான இடங்களில் நடந்தசோதனையின்போதும் ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நயினார் நாகேந்திரனை ஜெயலலிதா பேரவை செயலாளர்பொறுப்பிலிருந்து ஜெயலலிதா நீக்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ளஅறிக்கையில், ஜெயலலிதா பேரவை செயலாளர்பொறுப்பிலிருந்து நயினார் நாகேந்திரன் நீக்கப்படுகிறார். அவர் கழக தேர்தல் பிரிவுஇணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் டி.வி.மகாதேவன் நியமிக்கப்படுகிறார்என்று கூறியுள்ளார்.
போலீஸ் ரெய்டு நடந்துள்ள நிலையில் நாகேந்திரனின் கட்சிப் பொறுப்புமாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications