சிறப்பு பொருளாதார மண்டலம்: கருணாநிதி கருத்து
சென்னை:விவசாயிகளின் விளை நிலங்களை பாழ்படுத்தி விட்டு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதில்திமுகவுக்கும் உடன்பாடு இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சிறப்பு பொருளாதார மையங்கள் அமைப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
விவசாய நிலங்களை அழித்து விட்டு சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்குவதை அனுமதிக்கமுடியாது என்று அவர் கூறியுள்ளார்.
ராமதாஸின் இந்த எதிர்ப்பு குறித்து முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாய நிலங்களை அழித்து விட்டு சிறப்பு பொருளாதார மண்டலங்களைஅமைக்கக் கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார். அவரது கருத்துத் தான் எனது கருத்தும், திமுகவின் கருத்தும்.
5 பேருக்கு வேலை கிடைக்கிறது என்பதற்காக 500 பேரை வேலையில்லாமல் ஆக்குவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்காக விளை நிலங்கள் கையகப்படுத்தப்படமாட்டாது.
தரிசு நிலங்கள், விளைச்சலுக்கு ஏற்றதாக இல்லாத நிலங்கள் போன்றவைதான் இந்தத் திட்டங்களுக்குகையகப்படுத்தப்படும். நாட்டின் வளர்ச்சிக்கு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அவசியம் தேவை. இது ஒருகனவுத் திட்டம் என்று மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன் கூறியதை இப்போது நாம் நினைவில்கொள்ள வேண்டும்.
அவர் உயிருடன் இருந்தபோது தென் மாவட்டங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு நாங்குனேரியில் சிறப்புபொருளாதார மண்டலத்தை தொடங்கினார். அப்போது விளை நிலங்களை விட்டு விட்டு, யாருக்கும் குந்தகம்இல்லாதநிலங்களைத்தான் அவர் தேர்ந்தெடுத்தார் என்பதை இப்போதும் அந்த நாங்குனேரியைக் காண்பவர்கள் புரிந்துகொள்ளக் கூடும்.
மாறனின் மறைவும், மாநிலத்தில் திமுக பொதுத் தேர்தலில் அடைந்த தோல்வியும், அந்த கனவுத் திட்டம்முனைப்பாக தொடங்க முடியாமல் போனதற்கான காரணமாயின. அந்தத் திட்டம் மட்டும் திட்டமிட்டபடிதொடங்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், தென் மாவட்டங்களிலும் ஏன் குமரி மாவட்டம் வரையில்வளங்கொழிக்கச் செய்யும் வரப் பிரசாதமாகவே விளங்கியிருக்க முடியும்.
இந்த விளக்கத்திற்குப் பிறகாவது, திமுகவுக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே கடுகளவு கலகவிதையையாவது தூவி அதனைக் கடல் அளவுக்குப் பெருக்கிக் களிப்புறலாம் என நினைத்துச் செயல்படுவோர்,தமது கடையைக் கட்டிக்
கொள்வார்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications