கிரையோஜெனிக் சோதனை: இந்தியா சாதனை
பெங்களூர்:இந்தியாவின் முதலாவது கிரையோஜெனிக் ராக்கெட் இயந்திர சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் வளர்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.
அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை ஏவுவதற்கு ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் அவசியம். அந்த வகைராக்கெட்டுகளை செலுத்த எடை குறைந்த திரவ எரிபொருளைத்தான் பயன்படுத்த முடியும்.
திரவ எரிபொருள் கொண்ட கிரையோஜெனிக் இயந்திரங்கள் இந்தியாவிடம் இல்லை. இதனால்ரஷியாவிடமிருந்து கிரையோஜெனிக் இயந்திரங்களை பெற்று இந்தியா பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையைமாற்றி உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன், நமது நாட்டிலேயே கிரையோஜெனிக் இயந்திரங்களை தயாரிக்கமுடிவு செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ திரவ எரிபொருள் மையத்தில் இதுதொடர்பான ஆய்வுகள்மற்றும் சோதனை நடந்து வருகின்றன.
தற்போது இந்த சோதனையில் முக்கிய கட்டம் எட்டப்பட்டுள்ளது. முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன்இங்கே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இயந்திரம் வெற்றிகரமாக இயக்கி பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
மகேந்திரகிரி மையத்தில் நேற்று சுமார் 50 விநாடிகள் கிரையோஜெனிக் இயந்திரம் இயக்கி பரிசோதிக்கப்பட்டது.இச் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பெங்களூரில் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மகேந்திரகிரி மையத்தில் கிரையோஜெனிக் இயந்திரத்தின் முதலாவது சோதனைவெற்றிகரமாக நடத்தப்பட்டது. மாலை 6.20 மணிக்கு இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில்எதிர்பார்த்த முடிவு கிடைத்தது.
ராக்கெட்டுகளுக்கான எரிபொருள் மேம்பாடுத் திட்டத்தில் இது மிகப் பெரிய மைல் கல் ஆகும். வளர்ச்சிஅடைந்த நாடுகளிடம் மட்டுமே இப்போது இந்த வசதி உள்ளது. தற்போது அந்த வசதியை இந்தியாவும்பெற்றுள்ளது.
அடுத்த நான்கு வாரங்களில் மீண்டும் ஒரு நீண்ட நேர சோதனை நடத்தப்படவுள்ளது. அதன் பின்னர்இந்தியாவின் கிரையோஜெனிக் இயந்திரம் முழு பயன்பாட்டுக்கு வரும் என்றார்.
கிரையோஜெனிக் இயந்திரம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டிருப்பதன் மூலம் இந்திய ஏவுகனை திட்டங்களுக்குபெரும் ஊக்கம் கிடைத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications