யாழ். சாலையை திறக்க இலங்கை மறுப்பு

Subscribe to Oneindia Tamil

ஜெனீவா:யாழ்ப்பாணத்திற்கும், நாட்டின் இதர பகுதிகளுக்குமான இணைப்பு நெடுஞ்சாலையை திறக்க முடியாத என்றுஇலங்கை அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால் ஜெனீவா பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நார்வே தூதுக் குழு முயற்சியின் விளைவாக, இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே மீண்டும்பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.ஜெனீவாவில் நேற்று இப்பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் அரசு சார்பில் அமைச்சர் நிர்மல் ஸ்ரீபாலா டிசில்வாதலைமையிலான 8 பேர் கொண்ட குழுவும், புலிகள் அமைப்பின் சார்பில் சுப. தமிழ்ச்செல்வன் தலைமையிலான10 பேர் கொண்ட குழுவும் பங்கேற்றன.

பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே, யாழ்ப்பாணத்தையும், நாட்டின் பிற பகுதிகளையும் இணைக்கும்நெடுஞ்சாலையை இலங்கை அரசு திறக்க வேண்டும். அப்போதுதான் எதிர்கால பேச்சுாவர்த்தைகளில்பங்கேற்போம் என்று புலிகள் நிபந்தனை விதித்தனர்.

ஆனால் இதற்கு வாய்ப்பே இல்லை என்று இலங்கை அரசு தெரிவித்தது. இதனால் பேச்சுவார்த்தையில் சிக்கல்ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்த நிலையில், நேற்று தொடங்கிய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தமிழ்ச் செல்வன் கூறுகையில், முதல் நாள்பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. யாழ் சாலையை திறப்பது குறித்து அரசுத்தரப்பில் உறுதி ஏதும் தரப்படவில்லை. யாழ்ப்பாணம் எங்கள் வசம் இருந்தபோது அங்கு பல மனிதாபிமான,நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

ஆனால் இப்போது அங்கு அப்படி எதுவும் நடைபெறவில்லை. மிகப் பெரும் நெருக்கடியில் உள்ள யாழ்மக்களுக்கு நிவாரணம் தர இலங்கை அரசு அக்கறை காட்டாமல் உள்ளது. முதல் சுற்றுப் பேச்சில் முன்னேற்றம்இல்லை. இருந்தாலும் 2ம் நாள் பேச்சில் நாங்கள் கலந்து கொள்வோம் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் யாழ் செல்லும் சாலையை திறப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கை அரசுதெளிவுபடுத்தி உள்ளது. விடுதலைப் புலிகளின் தாக்குதல் அபாயம் அதிகமாக உள்ள நிலையில் யாழ் சாலையைதிறப்பது பாதுகாப்பானதாக இருக்காது.எனவே புலிகள், இந்தக் கோரிக்கையை கைவிட்டு விட்டு, வட கிழக்கு மாகாணங்களில் ஜனநாயகம், வளர்ச்சி,மனித உரிமைகள் குறித்து கவனம் செலுத்துவது நல்லது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

முதல் நாள் பேச்சுவார்த்தையின்போது இரு தரப்பினரும் பரஸ்பரம் புகார்களை தெரிவித்து பேசினர். முதல் நாள்பேச்சுக்கள் குறித்து இலங்கை குழுவின் தலைவரான நிர்மல் ஸ்ரீபாலா எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+