சென்னை மேயரானார் மா.சுப்ரமணியம்!
சென்னை:சென்னை மாநகராட்சியின் 46வது மேயராக திமுகவின் மா.சுப்ரமணியம் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவருக்கு ஆணையர் விஜயக்குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை மாநகர மேயர்கள் மற்றும் துணை மேயர்கள் தேர்தல் நேற்று நடந்தது.இந்த நிலையில் இன்று சென்னை மாநகராட்சி மேயர் தேர்தல் நடந்தது.
காலை 9.30 மணிக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. அப்போது திமுகவைச் சேர்ந்த மா.சுப்ரமணியன்மட்டுமே வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவரது மனுவை காங்கிரஸ் கவுன்சிலர் சைதை ரவி முன் மொழிய,பாாமக கவுன்சிலர் டி.எஸ்.மூர்த்தி வழி மொழிந்தார்.
மா.சுப்ரமணியத்தைத் தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து அவர்போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தலை நடத்திய மாநகராட்சி ஆணையர் விஜயக்குமார் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து மேயருக்குரிய சிவப்பு அங்கி, தங்கச் சங்கிலி ஆகியவை மா.சுப்ரமணியத்திற்குவழங்கப்பட்டது. உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளி செங்கோலை மா.சுப்ரமணியத்திடம்வழங்கினார். பின்னர் மா.சுப்ரமணியத்தை, ஸ்டாலின் மேயர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தார்.
அதேபோல துணை மேயர் தேர்தலில் திமுகவின் சத்யபாமா மட்டும் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்துஅவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ஆணையர் விஜயக்குமார் அறிவித்தார். இதையடுத்து துணைமேயர் இருக்கையில் சத்யபாமாவை மேயர் மா.சுப்ரமணியம், அமைச்சர் ஸ்டாலினும் அழைத்துச் சென்று அமரவைத்தனர்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும்கலந்து கொண்டனர்.
பதவியேற்புக்குப் பின்னர் மேயர் மா.சுப்ரமணியம், துணை மேயர் சத்யபாமாவும் முதல்வர் கருணாநிதியைசந்தித்து வாழ்த்து பெற்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications