ஜெ. புகார்: நரேஷ் குப்தா தள்ளுபடி
சென்னை:மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ள புகாருக்கு ஆதாரம்இல்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறியுள்ளார்.
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யப்பட்டதாகசமீபத்தில் ஜெயலலிதா புகார் கூறியிருந்தார்.
அதாவது, 2 ஓட்டுக்கள் அதிமுகவுக்கு பதிவானால் 8 ஓட்டுக்கள் திமுகவுக்கு பதிவாகும் வகையில்இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டிருந்தாக ஜெயலலிதா கூறியுருந்தார்.
இந்தப் புகாருக்கு தேர்தல் ஆணையம்தான் பதிலளிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் இதுகுறித்து நரேஷ் குப்தாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது,
கடந்த பொதுத் தேர்தலின்போதும் இதுபோல புகார்கள் வந்தன. இதுகுறித்து அனைத்துக் கட்சியினருக்கும்தெளிவாக விளக்கினோம். அதை அவர்களும் ஏற்றுக் கொண்டனர். திருப்தியும் தெரிவித்தனர்.
இதுபோன்ற புகார்கள் திட்டவட்டமானதாக இருந்தால் மட்டுமே ஆணையம் விளக்கம் அளிக்கவோ, விசாரணைநடத்தவோ முடியும்.
தற்போது வந்துள்ள புகார்கள் குறித்து தலைமை தேர்தல் ஆணையகத்திற்கு அனுப்பியுள்ளோம். விரைவில்மத்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று கூறினார் நரேஷ்குப்தா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications