40 பதவிகளைப் பறித்த திமுக: ராமதாஸ் கோபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:திமுக தங்களுக்கு ஒதுக்கிய 40 உள்ளாட்சித் தலைவர் பதவிகளை திமுகவினரே பறித்துக் கொண்டு விட்டதாகபாமக நிறுவனர் ராமதாஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல்நடந்தது. இதில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பல இடங்களில் திமுகவினரே போட்டிவேட்பாளராக போட்டியிட்டு கைப்பற்றி விட்டனர்.

இதனால் பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அதிருப்திஅடைந்துள்ளன. பாமகதான் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தலைவர் பதவிகளுக்கானதேர்தல் திட்டமிட்டபடி நடந்து முடிந்துள்ளது. திமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில்கிட்டத்தட்ட 40 தலைவர் பதவிகளைப் பறித்துள்ளனர்.

பாமகவிடமிருந்து இந்தப் பதவிகளைப் பறித்து வெற்றி பெற்றவர்கள் கூட்டணிக்குத் தலைமை தாங்கும்திமுகவைச் சேர்ந்தவர்கள். கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சியினரே, தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதலைவர் பதவிகளுக்கு திடீரென்று போட்டி வேட்பாளர்களை நிறுத்தியது எப்படி?

அப்படி திடீரென்று போட்டியிட்டவர்களும், அவர்களைப் பின்னால் இருந்து இயக்கியவர்களும் திமுகநிர்வாகிகளாக இருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. மாவட்டத்தில் உள்ள அமைச்சர்களுக்கு தெரியாமல்,அவர்களின் ஆசி இல்லாமல் இது நடந்திருக்க முடியாது.

கட்டுப்பாடுள்ள கட்சி என்று சொல்லிக் கொள்ளும் திமுகவில் இது எப்படி சாத்தியமாகியிருக்கிறது? தலைமையும்அவர்களின் கீழ் இயங்கும் மாவட்டச் செயலாளர்களையும் மீறி இது நடந்திருக்க முடியுமா என்ற கேள்விவிஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

2 நாட்களுக்கு முன்புதான், கூட்டணிக்குத் துரோகம் செய்து, வெற்றி பெற்று பதவிக்கு வந்தாலும் அப்படி வந்தபதவி அற்ப ஆயுளில் முடிக்கப்பட்டு விடும் என்பதால் அதை அற்ப சந்தோஷம் என சொல்லலாம் எனகருணாநிதி கூறியிருந்தார்.

தோழமைக் கட்சியான பாமகவுக்கு துரோகம் செய்து பதவியில் அமர்ந்து விட்ட திமுகவினரின் பதவி அற்பஆயுளில் முடிக்கப்படும் நாள் எந்நாள்? அவர்களின் சந்தோஷம் அற்ப சந்தோஷமாக மாறும் காலம் எப்போதுவரும்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த கேள்விகளுக்கெல்லாம் திமுக தலைமை என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை எல்லோரும்எதிர்பார்க்கிறார்கள். பொருத்திருந்து பார்ப்போம் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில், திமுகவினரால் தோற்கடிக்கப்பட்டஉள்ளாட்சிப் பதவியிடங்களை பட்டியலிட்டுள்ளார். அதன்படி பாமக இழந்த இடங்கள்:

மாவட்ட ஊராட்சித் தலைவர்: காஞ்சிபுரம்.

நகராட்சித் தலைவர்: ஆற்காடு, சீர்காழி, ஓசூர், சிதம்பரம்.

3ம் நிலை நகராட்சித் தலைவர்: அவனியாபுரம், ஜோலார்பேட்டை, திருவேற்காடு.

ஊராட்சி ஒன்றியத் தலைவர்: ஆர்.கே.பேட்டை, சித்தாமூர், சோழிங்கர், கணியம்பாடி, அரக்கோணம்,வாலாஜாபேட்டை, ஓலக்கூர், துரிஞ்சாபுரம், நல்லூர், குத்தாலம், செம்பனார்கோவில், குடவாசல்,காவேரிப்பட்டனம், அந்தியூர், நாமகிரிப்பேட்டை.

பேரூராட்சித் தலைவர்: மாங்காடு, பள்ளிகொண்டா, இடைக்கழிநாடு, கீழ்பெண்ணாத்தூர், திட்டக்குடி,வேப்பத்தூர், தரங்கம்பாடி, பொம்மிடி, பி.மேட்டுப்பாளையம், ஆப்பக்கூடல், பெரிய அக்ரஹாரம்,கொளத்துப்பாளையம், மானாமதுரை, நெற்குப்பை, அம்மையநாயக்கனூர், சாம்பவார் வடகரை, ஆத்தூர்.

இதேபோல, நெல்லை மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.ஆனால் வேட்பு மனு தாக்கலின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் சிவகாமிசுந்தரியின் பெயரைமுன்மொழியவும், வழி மொழியவும் கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை.

இதனால் அதிருபதி அடைந்த அவர் தேர்தலைப் புறக்கணித்தார். இதையடுத்து திமுகவைச் சேர்ந்த பெல் என்கிறகிரகாம் பெல்லும், காங்கிரஸ் கட்சியின் குமாரராஜாவும் போட்டியில் குதித்தனர். இதில் பெல் வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் அதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை. திமுகவினர்திட்டமிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பதவியைப் பறித்து விட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவரான நல்லகண்ணு குற்றம் சாட்டியுள்ளார். இது எதிர்கால அரசியலுக்கு நல்லதல்ல என்று அவர்கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+