கிரிக்கெட்: ஆஸி.யிடம் இந்தியா தோல்வி
மொஹலி:பஞ்சாப் மாநிலம் மொஹலியில் நடந்த சாம்பியின்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா,ஆஸ்திரேலியாவிடம் பரிதாபமாக தோல்வியுற்றது.
மினி உலகக் கோப்பை போட்டி என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி முக்கிய கட்டத்தைஎட்டியுள்ளது. நேற்று நடந்த முக்கிய ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சந்தித்தன.
இரு அணிகளும் இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற முடியும் என்றநிலை இருந்ததால் இரு அணிகளும் வெற்றியை குறி வைத்து களம் இறங்கின.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் டிராவிட் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். வீரேந்திரஷேவாக்கும், சச்சின் டெண்டுல்கரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
கடந்த போட்டிகளில் சரியாக விளையாடாமல் இருந்த ஷேவாக் நேற்று அதிரடியாக ஆடினார். அதற்கு மாறாகசச்சின் ரசிகர்களை கடுமையாக ஏமாற்றினார். ஷேவாக் பட்டாசு போல பொரிந்து தள்ளி ரன்களைக் குவித்தார்.குறிப்பாக பிரட் லீயின் பந்துகளை அவர் சரமாரியாக அடித்து விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
இந்திய அணி 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சச்சின் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். வழக்கம் போல அவரதுவிக்கெட்டை வேகப்பந்துவீச்சாளர் மெக்கிராத் பறித்தார்.
இதையடுத்து களம் இறங்கிய திணேஷ் மோங்கியா வழக்கம் போல சொதப்பினார். 18 ரன்களை மட்டுமேசேர்த்து பெவிலியின் திரும்பினார். இதையடுத்து கேப்டன் டிராவிட் களம் இறங்கினார். வழக்கம் போலநிதானமாக ஆடிய டிராவிட் பின்னர் அதிரடிக்கு மாறினார்.
ஷேவாக் சிறப்பாக விளையாடி 65 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் டிராவிடும், முகம்மது கைபும்இணைந்து அடித்து விளையாடினார். டிராவிட் 52 ரன்களை எடுத்தார். கைப் 30 ரன்களை சேர்த்தார்.
அதன் பின்னர் அதிரடி ஆட்டக்காரர் தோணி வழக்கம்போல ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அதிரடியாகஆடினார். 25 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 28 ரன்களைக் குவித்தார். மறுபக்கம் அதிகம் எதிர்பார்க்கப்பட்டசுரேஷ் ரெய்னா அடித்து விளையாட முயன்று 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்திய அணி 50 ஓவர்களில் 249 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. ஆஸ்திரேலிய தரப்பில்மெக்கிராத், பிரட் லீ, பிரேக்கன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜான்சன், வாட்சன் தலா 1விக்கெட்டை எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்கஆட்டக்காரர்களான வாட்சனும், கில்கிரைஸ்ட்டும் தொடக்கம் முதலே அடித்து ஆடத் தொடங்கியதால் இந்தியரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த ஜோடியை 61 ரன்கள் வரை பிரிக்கவே முடியவில்லை. இர்பான் பதான் மற்றும் முனாப் படேலின்பந்துகளை இருவரும் விளாசித் தள்ளினர். குறிப்பாக படேலின் பந்துகள் அனைத்தும் பவுண்டரிகளுக்குவிரட்டப்பட்டது.
இந்த நிலையில் ஸ்ரீசந்த் பந்து வீச அழைக்கப்பட்டார். அவரது பந்துவீச்சுக்கு நல்ல பலன் இருந்தது. அதிரடி வீரர்கில்கிறைஸ்ட் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால் அதற்கு அடுத்து வந்த கேப்டன் ரிக்கி பான்ட்டிங்கும்,வாட்சனும் சேர்ந்து ரன்களை குவித்தனர்.
பான்டிங் 58 ரன்களும், வாட்சன் 50 ரன்களும் சேர்த்தனர். இந்த ஜோடியைப் பிரிக்கவும் இந்தியபந்துவீச்சாளர்கள் தடுமாறினர். இவர்களுக்கு அடுத்து வந்த டேமியன் மார்ட்டின் அடித்து விளையாடிஆஸ்திரேலியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்ட்டின் 73 ரன்களை குவித்தார். இறுதியில் 45.4வது ஓவரிலேயேஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 252 ரன்களை எடுத்து வெற்றி பெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இந்த தோல்வியின் மூலம் சாம்பியன் டிராபி போட்டித் தொடரிலிருந்து இந்தியா வெளியேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தோல்வி குறித்து கேப்டன் டிராவிட் கூறுகையில், இந்திய அணியின் பந்து வீச்சு பெரும் ஏமாற்றத்தைஅளித்தது. பந்துவீச்சு மோசமாக இருந்ததால்தான் தோல்வியை தழுவ நேரிட்டது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications