ஆயுதம் வாங்குவதில் இந்தியா நம்பர் 1
வாஷிங்டன்:வளரும் நாடுகளில் ஆயுதம் வாங்குவதில் இந்தியாதான் முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 5.4 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்யஒப்பந்தங்கள் போட்டுள்ளதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆய்வு மையம் வளரும் நாடுகளில் ஆயுதப் பரிமாற்றம் தொடர்பாக நடத்தியஆய்வில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 1998ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரையிலான ஆயுதபரிவர்த்தனைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வின்படி வளரும் நாடுகளிலேயே இந்தியாதான் அதிக அளவில் ஆயுத கொள்முதலில் ஈடுபட்டுள்ளது.கடந்த ஆண்டு மட்டும் 5.4 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுதங்கள் வாங்க இந்தியா ஒப்பந்தங்கள் செய்துள்ளது.
இதற்கு அடுத்த இடத்தை செளதி அரேபியா பெறுகிறது. இந்த நாடு 3.4 பில்லியன் டாலர் அளவுக்குஆயுதங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. 3வது இடத்தில் சீனா உள்ளது. இந்த நாடு 2.8 பில்லியன் டாலர்அளவுக்கு ஆயுத கொள்முதல் செய்யவுள்ளது.
ஒப்பந்தங்கள் போட்டுள்ளதில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும் ஆயுதங்கள் கைக்கு வந்து சேருவதைகணக்கிட்டபோது இந்தியாவுக்கு 3வது இடம்தான் கிடைத்துள்ளது.
ஒப்பந்தப்படி ஆயுதங்கைளப் பெறுவதில் செளதி அரேபியாவுக்கே முதலிடம். இந்த நாடு 3.5 பில்லியன் டாலர்அளவுக்கு ஆயுதங்களைப் பெற்றுள்ளது. இதற்கு அடுத்து இஸ்ரேல் 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலானஆயுதங்களை வாங்கியுள்ளது. இந்தியா 1.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வாங்கியுள்ளது.
ஆயுதங்களை விற்பதில் ரஷியாதான் முதலிடத்தில் உள்ளது. வளரும் நாடுகளுக்கு கடந்த ஆண்டு 7 பில்லியன்டாலர் அளவுக்கு ஆயுதங்களை விற்க ரஷியா ஒப்பந்தம் போட்டுள்ளது. இது 2004ம் ஆண்டு 5.4 பில்லியன்டாலராக இருந்தது.
பிரான்ஸ் நாடு 6.3 பில்லியின் டாலர் ஒப்பந்தத்துடன் 2வது இடத்தையும், 6.2 பில்லியன் டாலருடன் அமெரிக்காமூன்றாவது இடத்திலும் உள்ளன. இதற்கு அடுத்த இடம் இங்கிலாந்துக்கு. இந்நாடு 2.8 பில்லியன் அளவுக்குஆயுதங்களை விற்க ஒப்பந்தம் செய்துள்ளது.
1998ம் ஆண்டிலிருந்து 2005ம் ஆண்டு வரை இந்தியா 20.7 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுதங்களைவாங்கியுள்ளதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையிலும் அதிக மதிப்பிலானஆயுதங்களைப் பெற்ற முதல் நாடாகவும் இந்தியா திகழ்கிறது.
கடந்த 2005ம் ஆண்டில் மட்டும் வளரும் நாடுகள் 30.2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வாங்கஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன என்றும் இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications