ஆஸி.யுடன் தமிழக அரசு வர்த்தக ஒப்பந்தம்
சென்னைஆஸ்திரேலிய நாட்டின் தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்துடன் தமிழக அரசு வர்த்தக ஒப்பந்தம்மேற்கொண்டுள்ளது.
தெற்கு ஆஸ்திரேலிய தலைமை அமைச்சர் மைக் ரான் நேற்று சென்னைக்கு வந்தார். முதல்வர் கருணாநிதியைஅவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அவருடன் தெற்கு ஆஸ்திரேலியமாநிலத்தின் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவும் வந்திருந்தது.
இந்த சந்திப்புக்குப் பின்னர் தமிழக அரசுக்கும், தெற்கு ஆஸ்திரேலியாவுக்கும் இடையே வர்த்தகம்,பொருளாதாரம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தத்தில் மைக் ரானும், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரிபாதியும் கையெழுத்திட்டனர்.பின்னர் செய்தியாளர்களிடம் ரான் பேசுகையில், தெற்கு ஆஸ்திரேலியாவும், தமிழக அரசும், கல்வி, தொழில்,வர்த்தகம், சுற்றுலா, பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் இணைந்து செயல்பட இந்த ஒப்பந்தம்வழி வகுக்கிறது.
தெற்கு ஆஸ்திரேலியாவுடன் தமிழகம் மிகச் சிறந்த வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.அதற்குத் தேவையான வாய்ப்புகள் இரு மாநிலங்களிலும் அதிக அளவில் உள்ளன.
குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், சுரங்கம் ஆகிய பிரிவுகளில் மிக்ச சிறந்த முதலீடுகளைமேற்கொள்ள முடியும்.
தமிழகத்திற்கும், தெற்கு ஆஸ்திரேலியாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. இரு மாநிலங்களிலும் அதிகஅளவிலான கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். தெற்கு ஆஸ்திரேலியாவில் பல்வேறு தமிழ்த் திரைப்படங்களின்படப்பிடிப்புகள் அதிக அளவில் நடைபெறுகின்றன என்றார் மைக் ரான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications