நகரப் பேருந்துகளின் பார்டர் அதிகரிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இயக்கப்படும் நகரப் பேருந்துகளின் தூரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி ஒரு நகரத்தில் இயக்கப்படும் நகரப் பேருந்து, அந்த நகரபேருந்து நிலையத்திலிருந்து 30 கிலோமீட்டர் வரை மட்டுமே இயக்கப்பட முடியும்.

அதுபோலவே தற்போது தமிழகம் முழுவதும் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில்மட்டும் இது 40 கிலோமீட்டராக இருந்து வந்தது.

ஒவ்வொரு நகரும் பெருமளவில் வளர்ச்சி கண்டுள்ளதாலும், ஏராளமான புறநகர்கள் வந்து விட்டதாலும் நகரப்பேருந்துகளின் இயக்கு தூரத்தை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.

இதை ஏற்று தற்போது நகரப் பேருந்துகளின் தூரத்தை தமிழக அரசு அதிகரித்துள்ளது.

அதன்படி, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் நகரப் பேருந்துகளின் தூரம் 50 கிலோமீட்டராகஅதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அருகே உள்ள பிராட்வே பேருந்து நிலையத்தைஅடிப்படையாக வைத்து, அங்கிருந்து 50 கிலோமீட்டர் தூரத்திற்கு இனிமேல் நகரப் பேருந்துகள் இயக்கப்படும்.

இதன் மூலம் சென்னை நகரின் பல்வேறு புறநகர்களுக்கு இனிமேல் நகரப் பேருந்து சேவை கிடைக்கும்.மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், மீஞ்சூர், இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு புறநகர்ப்பகுதிகளுக்கு இனிமேல் நகரப் பேருந்துகள் செல்லும்.

அதேபோல தமிழகத்தின் இதர நகரப் பேருந்துகளின் எல்லை 35 கிலோமீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+