வேலூர்: திமுகவுக்கு எதிராக பாமக போராட்டம்
வேலூர்:உள்ளாட்சித் தேர்தலில் பாமகவை தோற்கடிக்க பாடுபட்ட வேலூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும்,ராணிப்பேட்டை எம்.எல்.ஏவுமான ஆர்.காந்தியைக் கண்டித்து பாமகவினர் வாயில் கருப்புத் துணி கட்டியபடிபோராட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளாட்சித் தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் பாமகவைதோற்கடித்து விட்டார் என காந்தி மீது டாக்டர் ராமதாஸ் ஆவேசமாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், வேலூர் மாவட்ட பாமக சார்பில் காந்தியைக் கண்டித்து வேலூரில் வாயில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். ஆற்காடு பாமக எம்.எல்.ஏ. இளவழகன் தலைமை தாங்கினார்.திருப்பத்தூர் எம்.எல்.ஏ.ராஜா முன்னிலை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி.சண்முகம்உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.
அண்ணா கலையரங்கம் அருகே உண்ணாவிரதம் இருக்க மட்டுமே போலீஸார் பாமகவினருக்கு அனுமதிகொடுத்திருந்தனர். ஆனால் அவர்கள் காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக கிளம்பியதால் போலீஸார் தடுத்துநிறுத்தினர். இதுதொடர்பாக பாமகவினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications