ஜெ. மீது டிஜிபியிடம் புகார்: எஸ்வி.சண்முகம்
சென்னை:என்னைக் கொலை செய்ய சதி நடக்கிறது. இதுதொடர்பாக காவல்துறை டிஜிபியிடம் அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா மீது புகார் கூறவுள்ளேன் என்று மதுரை மேற்குத் தொகுதி அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.எஸ்வி.சண்முகம் கூறியுள்ளார்.
அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிப் பேசி, அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளைஏற்படுத்தியவர் எஸ்வி.சண்முகம். இப்போது கட்சிக்குள்ளேயே ஓரம் கட்டப்பட்டு விட்ட அவர் இன்னும்கட்சியை விட்டு நீக்கப்படவில்லை.
அவரை எம்எல்ஏ. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யுமாறு அதிமுக தரப்பில் 2 முறை சபாநாயகர்ஆவுடையப்பனுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அக்கோரிக்கையை ஆவுடையப்பன் நிராகரித்துவிட்டார்.
இந்த நிலையில் சென்னைக்கு எஸ்வி.சண்முகம் வந்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில், எனது தொகுதியில் ரூ. 20 கோடி மதிப்பில் நலத் திட்டத்தை அமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
அத்திட்டம் நீண்ட நெடுங்காலமாக கோரப்பட்டு வந்த ஒன்று. எனவே தான் அந்த திட்டத்தை நிறைவேற்றிவைத்ததற்காக ஸ்டாலினைப் பாராட்டிப் பேசினேன். அதில் எந்தத் தவறும் இல்லை.
பிரிந்து கிடக்கும் திராவிட இயக்கங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பும், தகுதியும் ஸ்டாலினுக்கு மட்டுமேஉண்டு என்றும் பேசினேன். இதிலும் ஒரு தவறும் இல்லை.
இதற்காக என் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தது. நான் கவலைப்படவில்லை. ஆனால் மதுரை மத்தியதொகுதி இடைத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுக்கு மக்கள் சரியான பாடம் கற்பித்துவிட்டனர்.
என்னைக் கொலை செய்ய சதி செய்கிறார்கள். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது இதுதொடர்பாகடிஜிபியிடம் புகார் கொடுக்கவுள்ளேன்.
நான் அதிமுக கரை வேட்டி கட்டி வந்தால் உருவி விடுவோம் என அதிமுகவினர் மிரட்டுகின்றனர். எனவே நான்இப்போத அதிமுக கரை வேட்டி போட்ட வேட்டியை கட்டுவதே கிடையாது.
சட்டசபையில் நான் தனித்து செயல்படுவேன். இதற்காக எனக்கு பாதுகாப்பான, தனியான இடம் வழங்குமாறுசபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கவே சென்னை வந்துள்ளேன். ஒருவேளை எனக்கு தனி இடம்கொடுக்கப்படாவிட்டால் இப்போது உள்ள இடத்திலேயே அமருவேன். என்ன பிரச்சினை வந்தாலும் சமாளிக்கத்தயாராக இருக்கிறேன் என்றார் சண்முகம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications