வல்லரசுகளின் நட்பு தேவை: மன்மோகன் சிங்
திருவனந்தபுரம்:உலகில் உள்ள அனைத்து வல்லரசு நாடுகளின் நட்பும் நமக்குத் தேவை என்று பிரதமர் மன்மோகன் சிங்கூறியுள்ளார்.
கேரள மாநிலத்திற்கு வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் சிறப்புக் கூட்டத்தில்பேசினார். அப்போது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மாற்றிவிட்டதாக சிலர் கூறுகிறார்கள்.
அப்படி ஒரு எண்ணமே தேவையில்லை. பண்டித ஜவஹர்லால் நேரு உருவாக்கிய வெளியுறவுக் கொள்கையின்சாராம்சத்தில் எந்தவித மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை.
இந்திரா காலத்திலும், பின்னர் ராஜீவ் காந்தி காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த வெளியுறவுக்கொள்கையைத்தான் தற்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் கடைப்பிடிக்கிறது.
சில அணுகுமுறைகளில் இளக்கமான நிலை கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேச உறவுகளை விஸ்தரிக்கும்பொருட்டே இந்த நிலை எடுக்கப்பட்டுள்ளது.உலகில் உள்ள அனைத்து வல்லரசு நாடுகளின் நட்பும், நல்லெண்ணும் நமது நாட்டுக்கு தேவை. அதனால்தான்அமெரிக்கா, ரஷியா, சீனா போன்ற நாடுகளுடன் முன்பை விட நெருக்கமான உறவை இந்தியா ஏற்படுத்திவருகிறது.
விரைவில் சீன அதிபர் இந்தியாவுக்கு வரவுள்ளார். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக ரஷிய அதிபர்கலந்து கொள்ளவுள்ளார். நமது கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் சர்வதேச அளவில் நமது உறவுகளை, தொடர்புகளை,நெருக்கத்தை விஸ்தரித்து வருகிறோம்.
பாகிஸ்தானுடன் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் அந்நாட்டுடன் நட்புறவை வளர்க்கமுயற்சித்து வருகிறோம். அதேபோல பிற அண்டை நாடுகளுடனும் நெருக்கமான நட்பை கொண்டுள்ளோம்.
தெற்காசிய நாடுகளுடன் இந்தியாவின் நட்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாட்டின்பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 8 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் 10ஆண்டுகளில் இது 10 சதவீதமாக உயரும்.
பொருளாதார வளர்ச்சியை அடையும் அதேசமயம், வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடிமக்களின் நலனிலும்மத்திய அரசு அக்கறையுடன் உள்ளது. அப்போதுதான் உண்மையான வளர்ச்சியை நாம் எட்ட முடியும்.
இதை கருத்தில் கொண்டுதான் ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டம், நகர்ப்புற சீரமைப்பு திட்டம், ஊரகசுகாதாரத் திட்டங்களை எனது அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது என்றார் சிங்.
இக்கூட்டத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, பாதுகாப்பு அமைச்சர்ஏ.கே.அந்தோணி, வெளிநாட்டு இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி உள்ளிட்டோரும் பேசினர்.
3ம் தேதி பிரதமர் சென்னை வருகை:
பிரமதர் மன்மோகன் சிங் நவம்பர் 3ம் தேதி முதல் 2 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
3ம் தேதி இரவு 9.15 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங் சிறப்பு விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார். விமானநிலையத்தில் அவரை ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்கின்றனர்.
அதன் பின்னர் அவர் ஆளுநர் மாளிகைக்கு செல்கிறார். இரவு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.
4ம் தேதி சென்னை அருகே உள்ள ஓரகடம் என்ற இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் செல்கிறார். அங்குஅமைக்கப்படவுள்ள தேசிய வாகன சோதனை மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்தநிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக ஸ்ரீபெரும்புதூருக்கு மன்மோகன் சிங் செல்கிறார். அங்குள்ள ராஜீவ் காந்திநினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்.
இதையடுத்து நோக்கியா செல்போன் நிறுவனத்திற்கும், ராஜீவ் காந்தி கழகத்திற்கும் அவர் சென்றுபார்வையிடுகிறார். ஸ்ரீபெரும்புதூரில் புதிதாக நிறுவப்பட்டுள்ள பிளக்ட்ரானிக்ஸ் தொழில் பூங்காவை தொடங்கிவைத்த பின்னர் சென்னை திரும்புகிறார்.
அதன் பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications