திமுக எம்எல்ஏ பாபு கைது
சென்னை:மார்க்சிஸ்டு கட்சி முன்னாள் கவுன்சிலரை தாக்கிய வழக்கில் புரசைவாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ விஎஸ்.பாபுகைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி தேர்தல் நடந்த போது பெரம்பூரில் திமுக மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ் கட்சிகளுக்குஇடையே மோதல் ஏற்பட்டது. இதையொட்டி மார்க்சிஸ்டு முன்னாள் கவுன்சிலர் தேவி மற்றும் சிலர் கைதுசெய்யப்பட்டனர்.
இந் நிலையில் தேவி போலீசில் புரசைவாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ விஎஸ்.பாபு தன்னை தாக்கியதாக புகார்கொடுத்தார். மேலும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் வரதராஜனும், விஎஸ்.பாபுவைகைது செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். இதற்காக போராட்டமும் நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து செம்பியத்தில் உள்ள விஎஸ்.பாபுவின் இல்லத்தில் அவரை போலீசார் கைது செய்து,செக்ரட்ரியேட் காலனி காவல் நிலையத்திற்க்கு கொண்டு சென்றனர். அங்கு போலீசார் விஎஸ் பாபுவிடம்விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து திமுகவினர் அங்கு கூடினார்கள் இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் கலாட்டா, காலை வாரி விட்டது ஆகிய பிரச்சனைகளால் கூட்டணிக் கட்சியான பாமக,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை திமுகவுக்கு எதிராக போர்க் குரல் எழுப்பி வருகின்றன. இதனால் இந்தகட்சிகளை சமாதானம் செய்ய வேண்டிய நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது.
இதனால் தான் தனது கட்சி எம்எல்ஏவையே கைது செய்ய திமுக தலைமை உத்தரவிட்டதாகத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications