விருத்தாலம்: டீ கடையில் புகுந்த பஸ்-ஒருவர் பலி
விருத்தாலம்:செல்போனில் பேசியபடியே டிரைவர் பஸ்சை ஓட்டிச் சென்றதால் டீக் கடைக்குள் பஸ் புகுந்து சம்பவஇடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். 29 பேர் காயம் அடைந்தனர்.
விழப்புரத்திலிருந்து விருத்தாசலத்துக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் பள்ளிப்பட்டு சமத்துவபுரம் அருகேசென்றபோது டிரைவரின் செல்போன் ஒலித்தது. அப்போது டிரைவர் அந்த செல்போனை எடுத்து பேசி கொண்டேபஸ்சை ஓட்டிச் சென்றார்.
அப்போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி சமத்துவபுரம் அருகே இருந்த டீக் கடைக்குள் புகுந்து அருகில்இருந்த புளியமரத்தில் மோதி நின்றது. இதில் புளிய மரத்தின் அருகே பைக்குடன் நின்று கொண்டிருந்தவர்பரிதாபமாக உயிரிழந்தார். பஸ்சில் பயணம் செய்த 29 பேர் காயம் அடைந்தனர்.
உயிரிழந்தவர் பெயர் பாபு (35). இவர் பள்ளிப்பட்டையை சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications