ஐ.சி.சி. விருது: சிறந்த வீரர் ரிக்கி பாண்டிங்
மும்பை:சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சிறந்த வீரர் விருதை ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் பெற்றுள்ளார்.இந்திய வீரர்கள் யாருக்கும் விருது கிடைக்கவில்லை.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து விருதுஅளித்து கெளரவிக்கிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கான போட்டியில உலகின் முன்னணி அணிகளின்வீரர்கள், கேப்டன்கள் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் விருது பெற்றவர்களின் பெயர்கள் நேற்று இரவுமும்பையில் நடந்த நிகழ்ச்சியில் ஐ.சி.சி. அறிவித்தது.
சிறந்த வீரர் பாண்டிங்:
ரிக்கி பாண்டிங் இந்த ஆண்டின் சிறந்த வீரராகவும், சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரராகவும் இரண்டு விருதுகளைத்தட்டிச் சென்றார். ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹூசே சிறந்த ஒரு நாள் போட்டி வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
சிறந்த கேப்டன் ஜெயவர்த்தனே:
இலங்கை அணியின் கேப்டன் மஹிளா ஜெயவர்த்தனேவுக்கு சிறந்த கேப்டனுக்கான விருது கிடைத்துள்ளது.முதல் முறையாக சிறந்த வீராங்கனைக்கும் விருது அறிவிக்கப்பட்டது. அந்த விருதை ஆஸ்திரேலிய மகளிர்அணி கேப்டன் கரேன் ரோல்டன் பெற்றார்.
சிறந்த அம்பயருக்கான விருது சிமோன் டபேல் பெற்றார். சிறந்த டீம் ஸ்பிரிட்டுக்கான விருதை இங்கிலாந்துஅணி தட்டிச் சென்றது.
விருதுக்கான போட்டியில் இந்தியாவின் டிராவிட் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர். ஆனால் யாருக்கும்விருது கிடைக்கவில்லை. ஆனால் ஆறுதல் அளிப்பது போல உலக கனவு டெஸ்ட் அணியின் கேப்டனாகடிராவிட் தேர்வானார்.
ஒரு நாள் மற்றும் டெஸ்ட் உலக கனவு அணிகளும் இந்த விழாவின் போது அறிவிக்கப்பட்டன.
உலக டெஸ்ட் கனவு அணி:
மாத்யூ ஹைடன், மைக்கேல் ஹூசே, ரிக்கி பாண்டிங், ஷேன் வார்னே (அனைவரும் ஆஸ்திரேலியர்கள்), ராகுல்டிராவிட் (கேப்டன்-இந்தியா), முகம்மது யூசப் (பாகிஸ்தான்), சங்கக்காரா, முரளீதரன் (இலங்கை), பிளின்டாப்(இங்கிலாந்து), மக்காயா நிடினி (தென் ஆப்பிரிக்கா). 12வது வீரர் ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ.
உலக ஒரு நாள் கனவு அணி:
ஜெயவர்த்தனே (கேப்டன்-இலங்கை), கில்கிறைஸ்ட், ரிக்கி பாண்டிங், மைக்கேல் ஹூசே, பிரெட் லீ(ஆஸ்திரேலியா), டோணி, யுவராஜ் சிங், இர்பான் பதான் (இந்தியா), முரளீதரன் (இலங்கை), பிளின்டாப்(இங்கிலாந்து), ஷேன் பாண்ட் (நியூசிலாந்து). 12வது வீரர் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் (ஆஸ்திரேலியா)
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications