எம்எல்ஏ கைது: கருணாநிதியின் நாடகம்-ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னைமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தை முறியடிக்கும் வகையிலும், கூட்டணியில் பிளவுஏற்படுவதைத் தடுக்கும் வகையிலுமே திமுக எம்எல்ஏ பாபு மற்றும் கவுன்சிலர் சேகர் ஆகியோரை கைது செய்துமிகப் பெரிய நாடகத்தை நடத்தியுள்ளார் முதல்வர் கருணாநிதி என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாகுற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலின் போதுஏற்படுத்தப்பட்ட வன்முறை, அராஜகம் இந்திய வரலாற்றிலேயே எங்குமே நடந்ததில்லை. அதை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது.

திட்டமிட்டு வன்முறையை நிகழ்த்தி விட்டு, கூட்டணியில் பிளவு ஏற்படும் நிலையில் திமுக எம்எல்ஏவையும்,59வது வார்டில் வெற்றி பெற்று விட்டதாக அறிவிக்கப்பட்ட கவுன்சிலர் சேகரையும் கைது செய்து மிகப் பெரியகண்துடைப்பு நாடகத்தை கருணாநிதி அரங்கேற்றியுள்ளார்.

தேர்தல் வன்முறையால் ஏற்பட்ட அவப் பெயருக்கு ஒரே பரிகாரம் தேர்தலை ரத்து செய்து விட்டு மறு தேர்தல்நடத்தவதுதான். திமுக அரசு, காவல்துறை மற்றும் ரவுடிகளை நம்பி தேர்தலை ஒப்படைத்தார்கள். அவர்களும்அனைத்து விதமான சட்ட மீறல்களிலும் ஈடுபட்டனர். இட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டும் தங்களுக்குவேண்டிய சின்னத்தில் முத்திரை குத்தி வாக்குப் பெட்டிகளை நிரப்பினார்கள். சில இடங்களில் வாக்குப்பெட்டிகளையே தூக்கிச் சென்று வாக்குச் சீட்டுக்களை நிரப்பி உள்ளே வைத்தனர்.

சில இடங்களில் 110 முதல் 120 சதவீத வாக்குப் பதிவும் நடந்துள்ளது. எதிர்க்கட்சி பூத் ஏஜென்டுகளை கத்திமுனையில் மிரட்டினர். தேர்தல் நடைமுறைகள் மீறப்பட்டன. எனவே 155 வார்டுகளிலும் மீண்டும் தேர்தல் நடத்தவேண்டும் என அதிமுகவும், கூட்டணிக் கட்சிகளும் கோரி வருகின்றன. இதுதொடர்பாக வழக்கும்தொடரப்பட்டுள்ளது.

பாஜகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தல் வன்முறை மற்றும் முறைகேடுகளுக்கு கண்டனம்தெரிவித்துள்ளன. அவையும் மறு தேர்தல் கோரியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனது கட்சியினர் மீதானதாக்குதலையும், முறைகேடுகளையும் கருணாநிதியிடம் நேரில் பார்த்து புகார் சொல்லியும் கருணாநிதிமசியவில்லை.

இதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் வன்முறையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வருகிற 6ம் தேதிஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது. இதைப் பார்த்து பயந்து போன கருணாநிதி,அந்தப் போராட்டத்தை முறியடிக்கவே, திமுக எம்எல்ஏவையும், கவுன்சிலரையும் கைது செய்ய உத்தரவிட்டுநாடகம் போட்டுள்ளார்.

கூட்டணிக கட்சிகளை திருப்திப்படுத்தவே இந்த கைது நடவடிக்கை என தலைமைச் செயலக குடியிருப்பு காவல்நிலையம் முன்பு கூடிய திமுகவினரிடம், வட சென்னை மாவட்ட திமுக செயலாளர் பகிரங்கமாக,வெளிப்படையாகவே கூறியுள்ளார்.இதனால் திமுகவினர் கலைந்து சென்றனர்.

அவர் சொன்னது உண்மையா.? அப்படியானால், 6ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தத்திட்டமிட்டிருந்ததை நடத்த விடாமல் செய்யப்பட்ட நாடகம் தான் இந்த கைது நாடகமா?

இது உண்மை என்றால், முதல் கட்ட வாக்குப் பதிவின்போது வன்முறைகளே நடக்கவில்லை, அமைதியானவாக்குப் பதிவு நடந்ததாக மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரணும், டிஜிபி முகர்ஜியும் பேட்டிஅளித்ததன் உண்மைத் தன்மைஎன்ன? இவர்கள் இனியும் பொறுப்பில் நீடிக்கலாமா?

புரசைவாக்கத்தில் மட்டும்தான் வன்முறை நடந்தது என பொய்யான தோற்றத்தை உருவாக்கி, பாபு மற்றும் சேகர்ஆகியோரை கைது செய்துள்ள நிகழ்வு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சமாதானப்படுத்துவதாக அமையலாம்.ஆனால் 155 வார்டுகளிலும் முறைகேடு நடந்தது என்பதுதான் உண்மை.

இது மக்களே பங்கேற்காத தேர்தல். எதைச் சொல்லியும் மக்களை ஏமாற்ற முடியாது என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+