மலேசியாவின் புதிய மன்னர் சுல்தான் அபிதின்
கோலாலம்பூர்:மலேசிய நாட்டின் புதிய மன்னராக சுல்தான் மிஸான் ஜைனல் அபிதின் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மலேசியாவில் மன்னர் நடைமுறை இன்றும் உள்ளது. தற்போது மன்னராக சையத் சிராஜுதீன் புத்ராஜமாலுல்லைல் இருக்கிறார். இவர் ஓய்வு பெறவுள்ளதைத் தொடர்ந்து புதிய மன்னர் பெயரை அந்நாட்டுப்பிரதமர் அப்துல்லா அகமதுபதாவி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பதாவி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய மன்னராக சுல்தான் மிஸான் ஜைனல் அபிதின்நியமிக்கப்படுகிறார். அவருக்கு உதவியாக டுவாங்கு அப்துல் ஹலீம் நியமிக்கப்படுகிறார். இருவரும் டிசம்பர்13ம் தேதிபொறுப்பேற்கிறார்கள். அன்று முதல் 5 ஆண்டுகளுக்கு இருவரும் பொறுப்பு வகிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் பிரபல சாந்தர்ஸ்ட் ராயல் மிலிட்டரி அகாடமியில் ராணுவப் பயிற்சி பெற்றவர் புதிய மன்னராகநியமிக்கப்பட்டுள்ள அபிதின். 44 வயதாகும் அவர் தற்போது எண்ணை வளம் மிக்க டெரங்கனு மாகாணத்தின்நிர்வாகப்பொறுப்பில் உள்ளார்.
மலேசியாவின் 13வது மன்னராக அபிதின் பொறுப்பேற்கவுள்ளார். கோலாலம்பூரில் உள்ள தேசியஅரண்மனையில்நடந்த சிறப்புக் கூட்டத்தில் அபிதின் புதிய மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மலேசிய வம்சாவழி மன்னர் பரம்பரையினர் கூடி அபிதினை புதிய மன்னராக தேர்வு செய்தனர். மன்னரேநாட்டின் உயரிய தலைவர் என்றாலும் கூட அவருக்கென்று பிரத்யேக, ஆட்சி அதிகாரம் எதுவும் கிடையாது.சம்பிரதாய தலைவராகவே அவர் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications