சதாம் மீதான கொலை வழக்கில் நாளை தீர்ப்பு
பாக்தாத்:182 ஷியா முஸ்லீம்களை சித்திரவதை செய்து கொன்று குவித்தது தொடர்பாக ஈராக் முன்னாள் அதிபர் சதாம்உசேன் மீது தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. சதாமுக்கு இவ்வழக்கில் தூக்குத் தண்டனைவிதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈராக் அதிபராக சதாம் உசேன் இருந்தபோது பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டார். குறிப்பாக ஷியாமுஸ்லீம்களையும் குர்து இனத்தினரையும் கடுமையாக சித்திரவதை செய்து கொன்று குவித்ததாக குற்றச்சாட்டுஎழுந்தது.
ஷியா பிரிவினர் அதிகம் வாழும் துஜைல் என்ற கிராமத்தைச் சேர்ந்த சிலர் சதாமைக் கொல்ல முயன்றனர்.ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த சதாம், அந்த கிராமத்தைச் சேர்ந்தமுஸ்லீம்களைக் கொல்ல உத்தரவிட்டார்.
இதையடுத்து கடந்த 1982ம் ஆண்டு 182 ஷியா முஸ்லீம்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அமெரிக்காதலைமையிலான படையினர் ஈராக்கைப் பிடித்து, சதாமைக் கைது செய்த பின்னர் அவர் மீது பல்வேறுவழக்குககள் தொடரப்பட்டன. அதில் இந்த வழக்கும் ஒன்று.
இந்த வழக்கில் விசாரணை முடிந்து நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. சதாம் உள்பட மொத்தம் 7 பேர் மீதுகுற்றம் சாட்டப்பட்டுள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது.
நாளை வழங்கப்படவுள்ள தீர்ப்பில், சதாம் உள்ளிட்ட 7 பேருக்கும் தூக்குத் தண்டனையே கிடைக்கும் எனகூறப்படுகிறது. ஒரு வேளை தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால் ஈராக் சட்டப்படி தன்னை தூக்கில்தொங்க விடக் கூடாது, துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று நீதிமன்ற விசாரணையின்போது சதாம்ஆவேசமாக கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
நாளை வழங்கப்படவுள்ல தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தால் அது 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்விசாரணைக்கு அனுப்பப்படும். அதில் தண்டனை உறுதி செய்யப்பட்டால், 30 நாட்களுக்குள் தண்டனைநிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications