சென்னை: சிபிஐ இன்ஸ்பெக்டர் தற்கொலை
சென்னை:சென்னையில் சிபிஐ இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை மத்திய குற்றப்புலனாய்வு பிரிவில் (சிபிஐ) இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் முகிலன் (51).கே.கே.நகர் சிபிஐ குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக ரத்த கொதிப்பு நோயினால்அவதிப்பட்டு வந்தார்.
நேற்று காலை இவரது மனைவி தமிழ்செல்வி கடைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டுதற்கொலை செய்து கொண்டார் முகிலன். கடைக்கு சென்று சிறிது நேரத்தில் வீடு திருப்பிய தமிழ்ச்செல்வி வீட்டுகதவை தட்டினார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அவர் சந்தேகம் அடைந்து, பக்கத்துவீட்டுகாரர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார்.
அங்கு முகிலன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்துஎம்ஜிஆர் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றிபிரேத பரிசோதக்ைகாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications